“இது கொரோனா பார்ட்டி.. என்ஜாய் பண்ணுங்க.. எப்படி கொரோனா வருதுனு பாத்துடுவோம்!”.. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’.. நாட்டையே அதிரவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகளவில் அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்துள்ளது. வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1.35 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் மக்கள் பலரும் விதிமுறைகளை மீறி, சுயக்கட்டுப்பாட்டை மறந்து, கொரோனா விழிப்புணர்வில்லாமல் இயல்பாக இருக்கத் தொடங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் உள்ள டெக்ஸாக் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய அஜாக்கிரதை காரணமாக உயிரிழந்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிப்படைந்து சான் ஆன்டனியோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இந்த இளைஞர், கொரோனா வைரஸை முதலில் வதந்தி என நம்பியதுடன், இந்த உண்மையை அறிய கொரோனா வைரஸால் பாதிப்படைந்த ஒருவருடன் ‘கொரோனா பார்ட்டி’ ஒன்றையும் நடத்தி, கண்டறிய முயன்றுள்ளார். இதில்தான் இவருக்கு தொற்று ஏற்பட்டதுடன், வைரஸால் பாதிப்பும் அடைந்தார்.
எனினும் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த இவர், இறப்பதற்கு முன்பு அங்கிருந்த செவிலியரைப் பார்த்து ‘நான் தப்பு பண்ணிட்டேனு நெனைக்கிறேன். இது ஒரு வதந்தினு நினைத்தேன். ஆனால், அப்படி இல்லைனு புரிஞ்சுகிட்டேன்!’ என்று கூறியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
