"நான் சுஷாந்த் சிங் கிட்ட போறேன்" 'வடமாநில' இளைஞர் செய்த 'திடுக்கிடும் காரியம்...' 'கடிதத்தைக்' கண்டு 'அதிர்ந்த போலீசார்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தினால் மனமுடைந்த ராஜஸ்தான் மாநில தொழிலாளி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கணபத்தாஸ் என்ற 20 வயதான இளைஞர், கோவை அய்யண்ண கவுடர் வீதியில் வசித்து வந்தார். கணபத் தாஸ் வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் கணபத் தாஸ் அறைக்கு உணவருந்த வந்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் வெகுநேரகமாக திறக்காததால் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு கணபத்தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த காவல் துறையினர், கணபத் தாசின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணபத் தாஸ் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகர் எனவும், சுஷாந்த் சிங்கின் தற்கொலை காரணமாக மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
"நான் சுஷாந்த் சிங் பாய் கிட்ட போறேன்" என்று இந்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், அதனை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

மற்ற செய்திகள்
