“குழந்தையின் தலையை மிதித்து துன்புறுத்திய நபர்!”.. கர்ப்பிணி பெண்ணை சுற்றிநின்று தாக்கும் கொடூர பெண்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்ப்பிணி பெண் ஒருவரையும், பச்சிளம் குழந்தையையும் இளைஞர்கள் சிலர் மிருகத்தனமாக தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் இல்லினாய்ஸில் நடந்த இந்த சம்பவத்தில் மூன்று இளம் பெண்கள் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை சூழ்ந்து நின்றுகொண்டு சரமாரியாகத் தாக்குகின்றனர். அப்பெண்ணை கீழே தள்ளி தலைமுடியை பிடித்து இழுத்து அந்த பெண்கள் தாக்கும்போது, இளைஞர் ஒருவரும் அப்பெண்களுடன் சேர்ந்துகொள்ள, ஓடி வருகிறார்.
அவர் ஓடிவரும் வேகத்தில், அங்கிருந்த சிறுமியின் தலையில் மிதிக்க, குழந்தை பாரம் தாங்க முடியாமல், சுருண்டு விழுகிறாள். தனது தாய் அடிவாங்குவதை பார்த்து ஒருபுறம் பதறி அழ, இன்னொருபுறம் எழ முடியாமல், குழந்தை தவிப்பதை பார்க்க முடியாமல் தாய் கதறுகிறார்.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஒருபுறம் விவாதங்கள் போக, இன்னொருபுறம் இதுபற்றி யாருக்கேனும் தெரிந்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்கள் என்று இணையவாசிகல் கடும் கோபத்தில் கொந்தளித்தும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்
