"வயித்துல என்னமோ அசையுது... சீக்கிரமா டாக்டர கூப்பிடுங்க!" - கர்ப்பமான ஒரு மணி நேரத்தில்... இளம்பெண்'ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. வியப்பூட்டும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jul 22, 2020 04:39 PM

இந்தோனேசியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

indonesia tasikmalaya woman delivers baby within 1hr pregnancy

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் தாசிக்மலயா பகுதியை சேர்ந்த பெண் ஹெனி நூரேனி (வயது 28) இவருக்கு திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில், இவர் தான் கர்ப்பமான ஒரு மணி நேரத்திற்குள் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து அவர் உள்ளூர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நான் வீட்டில் இருந்த போது, என் உடலில் முதலில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. அதன் பின், திடீரென்று, என் வயிற்றின் வலது பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தேன். இதையடுத்து நான் என் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். வயிற்றில் எனக்கு பிடிப்புகள் இருந்தன. இதையடுத்து, ஒரு மணி நேரத்திற்குள் நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம். பின்னர், குழந்தையை பெற்றெடுத்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த ஒன்பது மாதங்களாக தவறாமல் தனக்கு மாதவிலக்கு ஏற்பட்டதாகவும், குழந்தை பெற்றெடுப்பதற்கு சற்று முன்பு கூட இரத்தப் போக்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவிய பின், பண்டுங் ஹசன் சாதிகின் மருத்துவமனைமகப்பேறு நிபுணர் டாக்டர் ருஷ்வானா அன்வர், கர்ப்பமாக இருக்கும் 25,000 வழக்குகளில் ஒருவருக்கு இது போன்று நடக்கலாம் என்றும், பெண்கள் சில நேரங்களில் தாங்கள் கர்ப்பமாக இருப்பதையே அறிந்திருக்கமாட்டார்கள். ஒருவேளை, அவர் எடையைக் குறைத்திருக்கலாம். இதன் காரணமாக அவர் குழந்தையுடன் இருப்பதை உணராமல் இருந்திருக்கலாம்.

எனினும், ஒரு பெண் கர்ப்பமாகி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிரசவம் செய்வது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார். இது ஒரு ரகசிய கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளாகவும் இருக்கலாம். தாய், மகன் இருவரும் நன்றாக இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indonesia tasikmalaya woman delivers baby within 1hr pregnancy | World News.