‘பேருந்தில் மோதி உயிரிழந்த காதலி!’.. ‘காணாமல்’ போன ’காதலன்’... ‘அடுத்த’ சில ‘நாட்களிலேயே’ நடந்த அதிர்ச்சி ‘சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் 18 வயது நபர் ஒருவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த பதிவு நெஞ்சை உருக்கியுள்ளது.

பிரிட்டனில் கோல்வில்லே பகுதியைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஜேம்ஸ் பிஞ்சர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போன இவரை போலீஸார் தேடிவந்த நிலையில் அண்மையில் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் இவர் தன்னுடைய முகநூலில் பதிவிட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ‘உங்களை நேசிக்கும், உங்களை கவனிக்கும், உங்களை விரும்பும் ஒருவரை எப்போதும் புறக்கணிக்காதீர்கள். ஒருநாள் நீங்கள் எழும்போது அவர் இல்லாததை நீங்கள் உணர்வீர்கள், சுருக்கமாக, உங்கள் வானில் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருக்கையில் சந்திரனை நீங்கள் இழந்தததை உணரலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் விட்விக் நகரில், ஜேம்ஸின் காதலி, சியான் எலிஸ் பேருந்து ஒன்றில் மோதி உயிரிழந்தார். இதனை அடுத்து விபத்து சம்பவம் நடந்த கல்லூரிக்கு அருகே, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் சாலைப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு ஆன்லைன் பெட்டிஷன் ஃபோரமை ஜேமஸ் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
