“#கந்தனுக்கு_அரோகரா! .. மதத்துவேசமும் கடவுள் நிந்தனையும்...”.. ‘உக்கிரமாக’ கொந்தளித்த ரஜினி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வெளியான கந்த சஷ்டி கவசம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் அண்மையில் வீடியோ வெளியானதை அடுத்து இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பின்னர் இந்த வீடியோவை தடை செய்யக்கோரியும், வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜக மாநில துணைத் தலைவா் எம்.என்.ராஜா, வழக்குரைஞா் பிரிவு மாநில தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையா் மகேஷ் குமார் அகா்வாலிடம் கடந்த ஜூலை 13-ஆம் தேதி ஒரு புகார் அளித்தனா்.

இதனை அடுத்து கறுப்பா் கூட்டம் யூ-டியூப் சேனல் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னைக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் நிர்வாகிகளில் ஒருவரான வேளச்சேரியைச் சோ்ந்த செந்தில்வாசன் என்பவரை கடந்த 15-ஆம் தேதி கைது செய்தனா். கந்த சஸ்டி குறித்து அவதூறாக வீடியோவில் பேசிய சுரேந்திரன் புதுச்சேரியில் 16-ஆம் தேதி சரணடைந்தார். கறுப்பர்கூட்டம் யூ-டியூப் சேனலில் கந்தசஷ்டி_கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், மேலும் 2 பேர் கைது. ஓட்டேரியைச் சேர்ந்த சோமசுந்தரம், மறைமலை நகரைச் சேர்ந்த குகன் ஆகிய 2 பேரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியது. பின்னர் யூ-டியூப் நிறுவனத்துக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பினர். அதன் பேரில் அந்த சேனல் வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியது.
இந்நிலையில் இதற்கு நன்றி சொல்லும் விதமாகவும், நடந்த விவகாரத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் ஒருசேர தன் கருத்தை வெளிப்படுத்திய ரஜினி, “#கந்தனுக்கு_அரோகரா! கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பலகோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி, கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்கமுடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவாது மதத்துவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியணும். எல்லா மதமும்
#கந்தனுக்கு_அரோகரா pic.twitter.com/zWfRVpufXk
— Rajinikanth (@rajinikanth) July 22, 2020
சம்மதமே கந்தனுக்கு அரோகரா!” என்று காட்டமாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
