VIDEO: குடிபோதையில் லாரி டயரை ‘கட்டிப்பிடித்து’ ரகளை.. பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடிபோதையில் லாரி டயருக்கு அடியில் படுத்து இளைஞர் ஒருவர் ரகளை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துரை காவல் நிலையம் முன்பு குடிபோதையில் இளைஞர் ஒருவர் சாலையில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர். ஆனால் அதன்பின்னரும் அந்த நபர் வீட்டுக்கு செல்லாமல் சாலையில் செல்பவர்களிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ஆடைகளை கழற்றிவிட்டு அந்த வழியாக வந்த லாரியின் முன்னால் படுத்துவிட்டார். லாரியின் முன் சக்கரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு அங்கிருந்து நகராமல் ரகளை செய்துள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இளைஞரின் உறவினர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனாலும் லாரி டயரை பிடித்துக்கொண்டு அலப்பறை செய்தார். இதனை அடுத்து ஒருவழியாக அங்கிருந்து மீட்டு அவரை காரில் ஏற்றி சென்றனர். குடிபோதையில் லாரி டயரை பிடித்து ரகளை செய்த இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்
