ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட கார்... கார ஓப்பன் பண்ணி பாத்தப்போ... ''முப்பது வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவரோட''... வெளியான 'திடுக்'கிடும் 'உண்மை'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்வடக்கு அயர்லாந்து பகுதியில் அமைந்துள்ள பன் நதியில் இருந்து கடந்த மாதம் ஃபோர்டு ஓரியன் வகை கார் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அதிர்ச்சி தரும் தகவலாக, அதற்குள் இருந்து ஒருவரின் சடலம் கிடைத்த நிலையில், அது யார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. தற்போது அந்த சடலம் யாரு என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போன ஜேம்ஸ் பேட்டர்சன் என்பவரின் உடல் தான் என அறியப்பட்ட நிலையில், ஜேம்ஸ் பேட்டர்சன் 1991 ஆம் ஆண்டு தனது நண்பர் ஒருவரை காண வேண்டி மருத்துவமனை சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது சடலம் முப்பது ஆண்டுகளுக்கு பிபிறகு கிடைத்துள்ள நிலையில், அவர் மரணத்தில் ஏதேனும் மர்மம் உள்ளதா என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முப்பது வருடங்களுக்கு முன் மாயமான மனிதரின் சடலம், தற்போது ஒரு காரிற்குள் கிடைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
