"சென்னை பெசன்ட் நகர் சாலையோரத்தில் என் தாத்தாவிடம் 'அரசியல்' கற்றேன்!" - அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் 'கமலா ஹாரிஸ்' பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Aug 12, 2020 04:45 PM

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

us election vice president candidate kamala harris chennai besant naga

கமலா ஹாரிஸ் வெற்றிபெறும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், முதல் கருப்பின பெண் துணை அதிபர், முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் இந்திய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை அதிபர் என பல புதிய சாதனைகளை பதிவு செய்வார்.

கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன், சென்னையில் பிறந்தவர் ஆவார். முனைவர் பட்டப்படிப்பிற்காக அமெரிக்காவுக்கு சென்றவர் அங்கேயே குடிபெயர்ந்தார். பராக் ஒபாமாவைப் போலவே, கமலா ஹாரிஸ் கருப்பின மக்களிடையே பிரபலமானவர். துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்குவதால், கருப்பின மக்களின் வாக்குகள் முழுமையாக ஜோ பிடன், ஹாரிஸ் அணிக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

நேர்காணல் ஒன்றில் கமலா ஹாரிஸ் கூறும்போது, "என் அம்மா தனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமிதம் கொள்வார். நானும், என் சகோதரி மாயாவும், எங்கள் கலாச்சாரம் குறித்த பெருமையை உணர்ந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாங்கள் இந்தியாவுக்குச் செல்வது வழக்கம். தமிழ் பாரம்பரியத்தையும், இந்தியக் கலாச்சாரத்தையும் மறக்கக்கூடாது என்பதற்காவே எனது அம்மா ஷியாமலா கோபாலன் எனக்கு கமலா எனப் பெயரிட்டார்.

என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் என் தாய்வழி தாத்தாவான டி.வி. கோபாலன் ஆவார். இந்திய அரசின் துணை செயலராகப் பதவி வகித்தவர் அவர். என் தாத்தா சுதந்திர போராட்ட தியாகளில் ஒருவர் ஆவார்.

சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த சில நினைவுகளில் ஒன்று, அவர் ஓய்வுபெற்றபின் பெசன்ட் நகர் கடற்கரையில் மேற்கொள்ளும் நடைபயிற்சி தான். அவர் ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகளான தனது நண்பர்களுடன் தினமும் காலையில் கடற்கரையில் நடந்து செல்வார்.

அவர்கள் அரசியல் பற்றி, ஊழலை எதிர்த்து எவ்வாறு போராட வேண்டும், நீதி உள்ளிட்ட பல விஷயங்களை பேசுவார்கள்; குரல் கொடுப்பார்கள்; வாதிடுவார்கள்.

அந்த உரையாடல்கள், என்னை சமூகப் பொறுப்புள்ளவராகவும், நேர்மையாகவும் இருப்பதைக் கற்றுக் கொள்வதில் என் மீது இவ்வளவு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின. என் தாத்தா தான் அரசியல் வாழ்க்கையில் எனது உத்வேகம். இந்தியா உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடு. எனவே, அது எனது பின்னணியின் ஒரு பகுதியாகும்.

எனது அடையாளம் குறித்து எனக்கு எந்தவொரு அசெளகரியமும் இதுவரை ஏற்படவில்லை. எளிமையாக சொல்லவேண்டுமானால் நான் ஒரு அமெரிக்கர். நான் யார் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். எனது குடும்பம் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள், எனது சமூகம் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் எனது வழிகாட்டிகள் மற்றும் சகாக்கள் மற்றும் நண்பர்களின் செல்வாக்கு குறித்து நான் பெருமைப்படுகிறேன். நிறத்தாலோ அல்லது பின்புலத்தாலோ ஒருவர் அரசியல்வாதியாகக் கூடாது" என அவர் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Us election vice president candidate kamala harris chennai besant naga | World News.