"போதை தலைக்கேறி இளம்பெண் செய்த குறும்பு!".. காதலியை பறிகொடுத்த இளைஞர்! சினிமா பாணியில் காதலனை காப்பாற்றிவிட்டு காதலி மரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jun 27, 2020 09:43 PM

அமெரிக்காவில் குடிபோதையில் இளம்பெண் ஒருவர் செய்த குறும்பு காரியத்தால் இன்னொரு இளம் பெண் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

girl saved boyfriend’s life and dead by gun shot

அமெரிக்காவில் உள்ள தன் உறவினர் ஒருவரது காதலரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஆண்ட்ரீஸ் அரியாஸ் என்கிற இளைஞர் தன்னுடைய காதலியான எரிகா லோப்ஸ் என்பவருடன் சென்றுள்ளார். ஹோட்டலின் மொட்டை மாடியில் நடந்த கொண்டாட்டங்களின் போது அங்கே இருந்த இன்னொரு கூட்டத்திலிருந்த, இளம்பெண் ஒருவர் குடிபோதையில் எரிகா மற்றும் இன்னொரு இளம்பெண்ணின் பின் பக்கமாக தட்டி, தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இதனால் இரண்டு குழுக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட ஆண்ட்ரீஸ் மற்றும் எரிகா இருவரும் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். ஆனாலும் அவர்களை பின் தொடர்ந்து அந்த இன்னொரு கூட்டத்தில் இருந்து வந்த சிலர் இவர்களிடம் வம்பிழுத்துள்ளனர். அப்போதும் ஆண்ட்ரீஸ் மற்றும் எரிகா இருவரும் தங்கள் பக்க நியாயத்தை விளக்கி உள்ளனர். ஆனால் அதற்குள் காரில் வந்த அந்த கூட்டத்தை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியை எடுத்து ஆண்ட்ரீஸை பார்த்து சுட்டுள்ளார்.

ஆனால் தன்னுடைய காதலர் மீது பாய்ந்து விடக்கூடாது என்பதற்காக எரிகா,   குறுக்கே வர, அவரது நெஞ்சில் துளைத்த துப்பாக்கி குண்டு முதுகு பக்கமாக வெளியேறி ஆண்ட்ரீஸின் விலாவைத் துளைத்து வெளியேறியுள்ளது. பின்னர் காதலி கீழே விழும்போது அதனை கண்ட ஆண்ட்ரீஸ் அவரை தாங்கிப் பிடிக்க முயன்ற போது, எரிகா சுயநினைவின்றி விழுந்துள்ளார்.

சிபிஆர் பயிற்சி பெற்ற ஆண்ட்ரீஸ் தன்னுடைய காதலிக்கு, முதல் உதவி செய்ய முயற்சி செய்த போது அவரும் தன்னை அறியாமல் மயங்கி விழுந்துள்ளார். கண்விழித்து அவர் பார்க்கும் பொழுது அவர் ஸ்ட்ரெச்சரில் இருந்துள்ளார். தன்னுடைய காதலி உயிரிழந்ததை அறிந்த ஆண்ட்ரீஸ் தன்னால் காப்பாற்ற முடியாததை எண்ணி கதறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Girl saved boyfriend’s life and dead by gun shot | World News.