“கடவுள்கிட்ட பேசிட்டேன்.. நான் இத செஞ்சே ஆகணும்!”.. வேலையை இழந்ததால் நபர் எடுத்த விபரீத முடிவு.. காதலிக்கு நேர்ந்த கதி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 01, 2020 03:40 PM

பென்சில்வேனியாவில் 38 வயதான ல்ரோடரிக் ப்ளிஸ் (Roderick Bliss) என்பவர் கடும் மன உளைச்சல் காரணமாக தன்னுடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்த காதலியுடன் தன் வீட்டிலேயே வாக்குவாதம் செய்துள்ளார்.

man lost job, shoots girlfriend kills himself over corona pandemic

இந்த வாக்குவாதத்துக்கு முன்னர், இந்த கொரோனா சூழலால், தனது நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாக, தனது வேலை பறிக்கப்பட்டதாகவும், அதற்காக மிகுந்த வருத்தத்திலும் மன உளைச்சலிலும் ப்ளிஸ் இருந்ததாக அவரது காதலி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் தனது காதலியுடன் ப்ளிஸ் சண்டையிட்டபோது, திடீரென ஆத்திரப்பட்ட ப்ளிஸ், தன் வீட்டின் தனிப்பகுதியில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். அதைக் கண்டதும் ப்ளிஸின் காதலி வேகமாக ஓடியுள்ளார். ஆனாலும் விடாமல் துரத்திய ப்ளிஸ், தனது காதலியின் பின்னாலேயே 4 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்து வீட்டார் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் விரைந்து வந்து, ப்ளிஸின் காதலியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் ப்ளிஸ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமும் நிகழ்ந்தேறியது.

மேலும் சுடுவதற்கு முன்னதாக, ‘நான் கடவுள்கிட்ட ஏற்கனவே பேசிட்டேன். நான் இதை செஞ்சே ஆகணும்’ என்று அவர் கூறியதாகவும், அவரது காதலி தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #CORONAVIRUS #JOBS #GIRLFRIEND