'காதலை' கைவிட மறுத்ததால்.. ஓடும் 'ஆற்றில்'.. மகளை 'தள்ளிவிட்ட' பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 10, 2019 10:41 AM

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள ஊத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா-கவிதா என்பவர்களது மகள் விவிதா. அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் அம்மாபட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரை காதலித்துள்ளார். இதனை அறிந்த விவிதாவின் பெற்றோர் காதலை விட்டுவிடும்படி அவரைக்  கண்டித்ததாக தெரிகிறது.

Parents Push them daughter in river, near Theni District

ஆனால் பெற்றோரின் பேச்சை கேட்க விவிதா மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து கல்லூரியில் இருந்து விவிதாவை வீட்டுக்கு அழைத்து சென்ற பெற்றோர், அவரிடம் காதலை கைவிடும்படி வற்புறுத்தி உள்ளனர். ஆனால் விவிதா மறுத்திருக்கிறார். இதனால் சின்னமனூர் அருகே ஓடும் ஆற்றில் விவிதாவை அவரது பெற்றோர் தள்ளி விட்டுள்ளனர்.

அப்போது அந்த வழியே ரோந்து சென்ற போலீசார் விவிதாவை காப்பாற்றியுள்ளனர். தற்போது விவிதாவின் பெற்றோரை கைது செய்து செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.