'நம்புங்க அவர் என்னோட ஜூனியர்'... 'நெகிழ செய்த 'டாடியின் லிட்டில் பிரின்சஸ்'... வைரலாகும் பதிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Aug 08, 2019 03:18 PM
ஃபேஸ்புக்கில் வைரலாகும் பதிவு ஒன்று பலரையும் புன்னகை கொள்ள செய்துள்ளது. அதற்கு காரணம் ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலமான பக்கமான ‘ஹியூமன்ஸ் ஆஃப் பம்பாய்' பக்கத்தில் பகிரப்பட்டுள்ள கதை தான் காரணம்.
‘ஹியூமன்ஸ் ஆஃப் பம்பாய்' பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவானது கல்வி கற்பதற்கு வயது தடை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. அதில் '' சட்டம் படிக்க வேண்டும் என ஆசை பட்ட தந்தைக்கு, அவருடைய இளமை காலங்களில் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. அதற்கு மாறாக நிறுவனத்தில் ஆலோசகராக பணி புரிந்தார். இதனிடையே மகள் சட்டம் படிக்க கல்லூரியில் சேர்ந்ததும், தினமும் நடத்தும் பாடங்களை குறித்து மகளிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
இந்நிலையில் தனக்கு கல்வி மீது இருந்த ஆர்வத்தையும் நிறைவேற்ற நேரம் வாய்த்து விட்டதாக எண்ணி மகளுடன் இணைந்து சட்டம் படிக்கத் தொடங்கிவிட்டார். இதையடுத்து அந்த பெண் எழுதிய பதிவில் “நம்புங்கள் இப்போது எனது தந்தை கல்லூரியில் எனக்கு ஜூனியர். இருவரும் ஒரே கல்லூரியில் பாடம் படித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். இது பலரையும் கவர்ந்துள்ள நிலையில், அப்பாவுக்கும் மகளுக்கும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.