பேஸ்புக்ல மாதிரி 'அழகா' இல்ல..நோ சொன்ன மாணவி..சண்டை போட்ட இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 24, 2019 03:21 PM

பேஸ்புக்கில் பார்த்த மாதிரி நேரில் இல்லை என்று கூறி,இளைஞரின் காதலை கல்லூரி மாணவி ஏற்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Girl Refused To Accept Youth After Seeing Him Directly

திருவள்ளூரை சேர்ந்த இளைஞர் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பேஸ்புக்கில் பழகியிருக்கிறார்.இந்த பழக்கம் காதலில் முடிந்துள்ளது.தொடர்ந்து மாணவியை நேரில் பார்க்க இளைஞர் அந்த கல்லூரிக்கு நேரில் சென்றிருக்கிறார். ஆனால் பேஸ்புக்கில் பார்த்தது போல அழகாக இல்லை என்று கூறி அந்த மாணவி இளைஞரின் காதலை ஏற்க மறுத்து விட்டார்.

நேற்று கோவையின் பிரபலமான பெண்கள் கல்லூரி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியுடன் தகராறு செய்வதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் இளைஞரைப் பிடித்து விசாரித்துள்ளனர்.ஆனால் அவர் ஒழுங்காக பதிலளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த இளைஞரை அவர்கள் தாக்க,இந்த சம்பவத்தை கேட்டு நேரில் வந்த போலீசார் இளைஞரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது தனது காதல் குறித்து அந்த இளைஞர் போலீசிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட போலீசார் பிடிக்கவில்லை என்று கூறிய மாணவியை தொந்தரவு செய்யக் கூடாது என்று இளைஞரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை எச்சரித்து அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சம்மந்தப்பட்ட கல்லூரி மாணவிக்கும் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.