'புள்ள ஹாஸ்டல்ல தானே இருக்கா'...'படிக்க போன இடத்துல 'லிவிங் டுகெதர்'...'மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 23, 2019 01:21 PM

முகநூலில் அறிமுகமான நபரை நம்பி காதலித்து, லிவிங் டுகெதரில் இருந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook love affair Medical Student Suspected death

ஈரோடு மாவட்டதை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது மகள் இந்துமதி. 20 வயதான இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கால்நடை மருத்துவ மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், ஒரத்தநாடு பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இந்துமதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்துமதியின் சடலத்துக்கு அருகே குடி போதையில் கிடந்த சதீஷ்குமார் என்ற நபரை தண்ணீர் ஊற்றி எழுப்பினார்கள். அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மருத்துவ மாணவியான இந்துமதிக்கு முகநூல் மூலம் அறிமுகமான நபர் தான் சதீஷ்குமார். தன்னை ஒரு பொறியாளர் என இந்துமதியிடம் அறிமுகப்படுத்தி கொண்ட இவர், இந்துமதியிடம் நட்பாக பழகியுள்ளார். நாளடைவில் அது காதலாக மாற,  2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த இருவரும் அவ்வப்போது நேரில் சந்தித்தும் காதலை வளர்த்துள்ளனர். ஒருகட்டத்தில் லிவிங் டுகெதரில் செல்ல முடிவெடுத்த இருவரும்  அவ்வப்போது வெளியில் அறை எடுத்து தங்கியும் வாழ தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் பிணைப்பு அதிகமானதால் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து கணவர் சதீஷ்குமாருடன் தனியாக ஒரத்தநாடு எழுத்துக்கார தெருவில் வாடகைக்கு வீடு பார்த்து இந்துமதி குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால் கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கியிருப்பதாக பெற்றோரிடம் பொய் சொன்ன இந்துமதி, புதிதாக குடியேறிய வீட்டிலிருந்து கல்லூரிக்கும் சென்று வந்துள்ளார். தங்கள் மகள் கல்லூரியில் படித்து வருகிறார் என்று மாணவியின் பெற்றோரும் மாதம் தோறும் இந்துமதிக்கு பணம் அனுப்பியுள்ளார்கள்.

இதனிடையே சதீஷ்குமாரின் உண்மை முகம் திருமணத்திற்கு பின்பு தான் இந்துமதிக்கு தெரியவந்துள்ளது. பொறியாளர் அல்ல எலக்ட்ரீசியன் என்பதும், ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் குடிக்கு அடிமையானவர் என்பதும் தெரிந்து நொந்து போனார். இதனால் இருவருக்கும் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் ஒருகட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு வந்த சதீஸ்குமார் இந்துமதியை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது.

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான இந்துமதி, பெற்றோருக்கு தெரியாமல் தான்  தேடிக் கொண்ட வாழ்க்கை, இப்படி நரக வேதனையை கொடுக்கிறதே என எண்ணிய அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தங்களது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, சதீஸ்குமார் தான் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதனால் மாணவி இந்துமதி தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா ? என்ற இரு வேறு கோணங்களில் காவல்துறையினர் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்கச் சென்ற இடத்தில் லிவிங் டுகெதரில் சென்று மருத்துவ மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளியூரில் தங்கிப் படிக்கும் தங்களது பிள்ளைகளுக்கு மாதம் தோறும் பணம் அனுப்பி, அவர்களுக்கு தேவையானதை எல்லாம் வாங்கி கொடுப்பதோடு மட்டுமல்லாது, அவ்வபோது பெற்றோர்கள் சென்று பார்த்து தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனித்தால் மட்டுமே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

Tags : #COLLEGESTUDENT #MURDER #FACEBOOK #MEDICAL STUDENT #LIVING TOGETHER