அழுது 'அடம்பிடித்து' வீட்டை எதிர்த்து.. காதலனை 'திருமணம்' செய்த மாணவி.. 4 நாளில் தற்கொலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 16, 2019 04:57 PM

அரியலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரது மகள் நிஷா(20) இவர் அதே பகுதியில் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது அக்காள் கணவரின் தம்பியான பிரகாஷ்(32) என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

College Girl committed suicide in Ariyalur, Police Investigate

ஆனால் இருவரது வீட்டிலும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 11-ம் தேதி பிரகாஷ்-நிஷா இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 4 நாட்கள் கழித்து அவர் தனது கிராமத்திற்கு வந்தார். அப்போது நிஷாவின் தாய் ஏன் இப்படி செஞ்ச? இதுக்குத்தான் உன்ன படிக்க வச்சோமா? என திட்டினார்.

இதனால் மனமுடைந்த நிஷா வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நிஷாவுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆனதால் இது குறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.