‘ஜடேஜா பண்ண ஒரு தப்பு’.. இந்தியாவுக்கு 5 ரன்னை குறைச்ச அம்பயர்..! 48-வது ஓவரில் அப்டி என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்தது. இதில் ஷிகர் தவான் 96 ரன்களும், கே.எல்.ராகுல் 80 ரன்களும், விராட் கோலி 78 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 304 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 98 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் முதல் இன்னிங்ஸின் 48-வது ஓவரை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை ராகுல் அடித்தார். அப்போது ரன் எடுக்க ஓடிய ஜடேஜா பந்து வீசும் பிச்சில் ஓடியதாக அம்பயர் இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதித்தார்.
அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு 5 ரன்கள் போனசாக வழங்கப்பட்டது. பின்னர் அந்த அபராதம் நீக்கப்பட்டது. முன்னதாக பந்து வீசும் பிட்ச் மீது ஓடியதற்காக அம்பயர் ஜடேஜாவுக்கு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
