‘தமிழகம்’ முழுவதும்... நாளை முதல் ‘கல்லூரிகளுக்கு’ தொடர் ‘விடுமுறை’.. உயர்கல்வித்துறை அறிவிப்பு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 20, 2019 02:17 PM

தமிழகம் முழுவதும் நாளை முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Holiday Declared For Colleges Universities Till Jan 1

தமிழகம் முழுவதும் நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் மாணவர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து ஜனவரி 2ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #HOLIDAY #COLLEGESTUDENTS #ELECTIONS #TN #LEAVE #CHRISTMAS #NEWYEAR