‘உலகக்கோப்பை பட்டியலில் இருந்து 3 வீரர்கள் நீக்கம்’.. ‘புதிதாக இணையும் 3 வீரர்கள்’.. திடீர் மாற்றத்தால் ஆடிப்போன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 20, 2019 10:58 PM

உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அதிரடியான சில முக்கிய மாற்றங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது.

World Cup 2019: Pakistan Add Amir, Wahab, Asif to World Cup Squad

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ளன. மே 30 -ம் தேதி தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஒவ்வொரு நாடும் தங்களது அணி வீரர்களின் இறுதிப் பட்டியலை வரும் 23 -ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்படுள்ள உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியல் தற்காலிகமானதுதான். அதனால் அணியில் ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டுமானால் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலகக்கோப்பையில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலில் மாற்றங்களை செய்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் இருந்து அபித் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகிய மூவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது அமிர், ஆசிப் அலி, வகாப் ரியாஸ் ஆகியோர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #PAKISTAN #MOHAMMAD AMIR #ASIF ALI #WAHAB RIAZ