'பிரமிடு'க்கு முன்பு வைத்து எடுக்கப்பட்ட கவர்ச்சி 'போட்டோஷூட்'... 'சர்ச்சை'யை கிளப்பிய 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்எகிப்து பகுதியிலுள்ள பிரமிடுகளை இழிவுப் படுத்தும் வகையில் போட்டோசூட் நடத்தியதாக புகைப்பட கலைஞர் ஒருவரும், மாடலான சல்மா எல்ஷிமி என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வாரம், தென் கைரோ என்னும் பகுதியிலுள்ள ட்ஜோஸர் பிரமிடு (Pyramid of Djoser) முன்பு சல்மா என்ற 26 வயது மாடல், பழங்கால பாரம்பரிய உடையுடன் கவர்ச்சியான வகையில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரமிடு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகம், சல்மா அருவருத்தக்க கவர்ச்சி உடையில் தோன்றியதாக குற்றஞ்சாட்டியுள்ளது. அதே போல, எகிப்து தொல்பொருள் கவுன்சில், எகிப்து தொல்பொருள் அல்லது தனித்துவமுள்ள பெருமைகளையுடைய இடங்களை அவமதிக்கும் வகையில் தோன்றுவது தண்டனைக்குரியது என்ற கருத்தை சுப்ரீம் கோர்ட்டில் முன் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக, சல்மா மற்றும் புகைப்பட கலைஞர் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது பெயிலில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இருவருக்கும் அதிக தண்டனைகள் வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
சல்மாவின் இந்த செயலுக்கு பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பாரம்பரிய சிறப்புள்ள இடங்களில் வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவது தவறான செயல் என்றும், இது அவமரியாதை செயல் என்றும் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், பலர் சல்மா செய்ததில் தவறு ஒன்றுமில்லை என்றும், தங்களுக்கு தோன்றிய செயலை செய்யக் கூட எகிப்தில் ஒருவருக்கு உரிமையில்லையா? என்ற முறையில் ஆதரவான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.