"இது வேற மாறி, வேற மாறி... மாஸான 'ஐடியா' மூலம் 'திருமண' போட்டோஷூட் நடத்திய 'தம்பதி',,.. வேற லெவலில் வைரலாகும் 'போட்டோஸ்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்தற்போதுள்ள காலகட்டங்களில் திருமணத்திற்கு முன்பு புதிய தம்பதிகள் 'Pre Wedding Shoot' என்ற பெயரில் புகைப்படங்கள் என்பது ஒரு டிரெண்டாக உள்ளது.

இந்த புகைப்படங்கள் மூலம் பல வித்தியாசமான யோசனைகள் உதித்து நெட்டிசன்களிடயே அதிகம் வைரலாகி வந்தாலும் சில புகைப்படங்கள் சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதும் இல்லை. அதே வேளையில் மேலும் சில புகைப்படங்களில் வித்தியாசமான யோசனைகள் லைக்குகளை அள்ளிக் குவிக்கவும் செய்கிறது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதி ஒன்று, தங்களது 'Pre Wedding Shoot' புகைப்படங்களுக்காக ஒரு படி மேலே சென்று, பட்டையைக்க கிளப்பியுள்ளது. உலகம் முழுவதும் மிகப் பெரிய ஹிட்டடித்த 'Money Heist' என்னும் வெப் சீரியஸ் தீம் பயன்படுத்தி அண்ட்ரூ ரோலியோ (Andrew Rolio) மற்றும் இனஸ் ஜேட் குயல் (Inez Jade Quial) என்ற அந்த தம்பதி புகைப்படங்களை எடுத்துள்ளது.
அந்த வெப் சீரியஸில் வரும் முகமூடிகள், உடைகள் மற்றும் துப்பாக்கிகள் என அச்சு அசலாக அப்படியே மேக்கிங் செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல், அந்த வெப் சீரியஸ் ட்ரைலர் போன்றே வீடியோ ஒன்றையும் எடுத்துள்ளது. பிலிப்பைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள பழங்கால கோவில் ஒன்றில் வைத்து இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை எடுத்துள்ளனர். அந்த இடம் பார்ப்பதற்கு அப்படியே 'Money Heist' தொடரில் வரும் வங்கியைப் போலவே உள்ளது.
இந்த வெப் சீரியஸிற்கென உலகளவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், அவர்கள் அனைவரிடமும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
