ஏலேய், 90'ஸ் 'கிட்ஸ்'... 'நோட்' பண்ணுங்க பா... 'சிகிச்சையளித்த' மருத்துவரையே கரம்பிடித்த... கொரோனா 'நோயாளி'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் மூலமாக நாள்தோறும் பல பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், எகிப்து நாட்டில் அரங்கேறிய காதல் கதை உலகிலுள்ள அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.

எகிப்து நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆயிஷா மொசபா என்ற பெண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன் முஹம்மது ஃபாமி என்பவர் அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ஆயிஷா சிகிச்சையளித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
இரண்டு மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த முஹம்மது, மோதிரம் அணிந்து ஆயிஷாவிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் தனது காதலையும் ஆயிஷா வெளிப்படுத்த, இந்த ஜோடியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.
காதல் என்பது இடம், நேரம் பார்த்து தோன்றுவதில்லை என்பதற்கு இந்த எகிப்து காதல் முன்னோடியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
