'இந்த மூனுல ஒன்னு நடந்தாலும் உலகமே திரும்பிப் பார்க்குமே?'.. 'வேற லெவல்' திருமணம் .. வைரலாகும் போட்டோ ஷூட்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 31, 2019 11:33 AM

இந்தியா-பாகிஸ்தான், இந்து-முஸ்லீம், பெண்-பெண் என பேதங்களைக் கடந்த பெண்கள் இருவரின் திருமண போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

same sex, india pakistan, hindu muslim couples photoshoot

பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய ஆர்ட்டிஸ்டான சுந்தாஸ் மாலிக் மற்றும், இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துவான அஞ்சலி சக்ரா இருவரும் எடுத்துக் கொண்டுள்ள புகைப்பட ஆல்பம் நியூயார்க் லவ் ஸ்டோரி என்கிற பெயரில் இணையத்தில் வெளியாகியதை அடுத்து, ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருடன் மண பந்தத்தில் கைகோர்ப்பது என்பதே ஒரு விதத்தில் ஆச்சர்யப்பட வைப்பதாக இருந்தாலும், அதிலும் இந்துவும் முஸ்லீமும் மதங்களைக் கடந்து இணைவது இந்த விஷயத்தில் இரண்டாவது சுவாரஸ்யம்.

அடுத்ததாக, நாடு, மதம் இவற்றைத் தாண்டி மூன்றாவதாக பாலின பேதத்தையும் கடந்து இந்த தன் பாலின பெண் ஜோடிகள் காதலால் இணைந்திருப்பதுதான், இந்த நியூ யார்க் லவ் ஸ்டோரியில் ஹைலைட். இதனையடுத்து இருவரும் பனிமழையில் குடைபிடித்தபடி திருமண அலங்கார உடையில் போட்டோ ஷூட்  எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

Tags : #NEWYORK #WEDDING #PHOTOSHOOT #VIRAL