எதுக்காக இப்படி ஒரு போட்டோஷூட் பண்ணினார்...? 'வைரலாகும் காரணம்...' - ஆனால் உண்மை அது இல்ல...!
முகப்பு > செய்திகள் > உலகம்தொப்பையில் பூக்கள், நீல நிற பாவாடை அணிந்து கொண்டு ஒரு கணவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களில் இருப்பவரின் மனைவி மகப்பேறு காலத்தில் எடுக்கப்படும் போட்டோ ஷூட்டிற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆகவே போட்டோஷூட் எடுக்க ஏற்கனவே பணம் கொடுக்கப்பட்டதால், கணவரே போட்டோஷூட் எடுத்துக் கொண்டார் என்று இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்த தகவல் உண்மையா என ஆய்வு செய்த போதும், அவை நான்கு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் இருப்பவர் கிண்டலுக்காக ஜாலியாக நண்பருடன் இணைந்து போட்டோஷூட் எடுத்துக் கொண்டார் என தற்போது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் வைரல் படங்களுடன் வலம்வரும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகி உள்ளது. உண்மையில் இந்த படங்கள் 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்டவை ஆகும்.
போலி செய்திகளை இதே போன்று பரப்புவது தொடர்கதையாகி வருகிறது.

மற்ற செய்திகள்
