'நீங்க எப்போ தான் வளருவீங்க'... 'கொதித்த மக்கள்'... 'டிக்டாக்கில் வீடியோ' போட்டதற்காக இளம்பெண்களுக்கு நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > உலகம்டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டதற்காக இளம்பெண்கள் இருவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Egyptian court sentenced 5 Women Over TikTok Video Egyptian court sentenced 5 Women Over TikTok Video](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/egyptian-court-sentenced-5-women-over-tiktok-video.jpg)
எகிப்தைச் சேர்ந்த இளம்பெண்கள் கொசாம், மவ்டா-அல்-ஆதாம். இவர்களுடன் சேர்ந்து 5 பேர் டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டுள்ளார்கள். இது நீதிமன்றத்தின் கவனத்திற்குச் சென்ற நிலையில், இவர்களின் வீடியோ சமூகத்தில் பொது ஒழுக்கத்தைச் சீர்குலைப்பதைப் போன்று இருப்பதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியது. மேலும் 5 பேருக்கும் 2 வருடச் சிறைத் தண்டனை விதித்து தி கைரோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் தலா 3 லட்சம் எகிப்தியன் பவுண்ட்ஸ்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், தன்னுடன் இணைந்து பணியாற்றினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற வீடியோவை ஹனின் கொசாம் வெளியிட்டார். தேபோல் ஆதாமும் மில்லியன் கணக்கில் உள்ள தன்னுடைய பாலோவர்ஸ்களுக்காக வீடியோவை வெளியிட்டார். இதற்காகத் தான் இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது பெண்களுக்கு எதிரான வன்முறை என்றும், குறிப்பிட்ட மக்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து பேசிய மனித உரிமைகள் ஆணைய வழக்கறிஞர் ஒருவர், ''அதிவேகமாக உயர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், பழமைவாத மத சமூகத்துடன் எப்படி மல்யுத்தம் செய்கிறது என்பதற்கு இந்த கைதுகள் எடுத்துக்காட்டு'' எனத் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் இணைய உலகம் தீவிர கண்காணிப்பில் உள்ளது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதப்படும் வலைத்தளங்களைத் தடுக்கவும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின் தொடர்வோர் இருந்தாலே அவர்களைக் கண்காணிக்கவும் திட்டங்களும் நடைமுறைகளும் உள்ளன.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)