‘நல்ல ஃபார்ம்ல இருக்காரு’... ‘முதல் டி20-ல அவர களம் இறக்குங்க’... ‘முன்னாள் கேப்டன் ஆலோசனை’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஸ்பின்னர் குல்தீப் யாதவ் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளதாகவும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவரை களமிறக்கலாம் என்றும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி அடைந்துள்ளது. தொடரை இழந்த நிலையிலும் நேற்றைய 3-வது போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.
நேற்றைய போட்டியில் சாஹலுக்கு பதிலாக களமிறங்கிய ஸ்பின்னர் குல்தீப் யாதவ், 10 ஓவர்களில் 57 ரன்களை மட்டுமே கொடுத்து கேமரான் கிரீன் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதையடுத்து அவரை நாளை துவங்கவுள்ள டி20 தொடரின் முதல் போட்டியில் களமிறக்கி எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பரிசோதிக்கலாம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் நாளைய டி20 போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பௌலிங் செய்தால், அதன்மூலம் மற்ற பௌலர்களுக்கு சுமை குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாண்ட்யாவின் பேட்டிங் சிறப்பாக இருந்ததை சுட்டிக் காட்டியுள்ள கவாஸ்கர், அவர் 4-வதாக இறக்கப்பட வேண்டும் என்றும், முதலில் விளையாடவரும் 3 வீரர்கள் 14 ஓவர்களுக்கு நிலைத்து ஆட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் துவக்க வீரர்களாகவும், 3-வதாக கோலியும் விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 15 ஓவர்களுக்கு துவக்க வீரர்கள் நிலையாக விளையாடும் நிலையில், பாண்ட்யா, மீதமுள்ள போட்டியை முறையாக கையாள்வார் என்றும் கவாஸ்கர் கூறினார்.
பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் விழும் நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை இறக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். முதலில் விளையாடும் 5 வீரர்கள் சிறப்பாக விளையாடினால், அடுத்த வீரர்கள் குறித்த கவலையில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 12,000 ரன்களை கடந்துள்ள விராட் கோலிக்கும் கவாஸ்கர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்டர் -19 காலத்திலிருந்தே அவரது ஆட்டத்தை தான் கண்டு வருவதாகவும், 60 அரைசதங்கள் மற்றும் 43 சதங்களை விராட் கோலி அடித்துள்ளது நம்ப முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.