‘160 பயணிகளுடன் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து!’.. ‘கடைசியில் நடந்த நெஞ்சை உருக்கும் சோகம்!’
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் தடம் புரண்ட பயணிகள் ரயிலில் பயணம் செய்த அத்தனை பேரையும் காப்பாற்றிவிட்டு ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் உருக்கியுள்ளது.

சிட்னியில் இருந்து 160 பயணிகளுடன் மெல்போர்ன் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலின் என்ஜினும் அதன் 5 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து பயணிகள் அனைவரும் ஒரு நொடி கதிகலங்கிவிட்டனர்.
வாலன் எனும் இடத்தில் நடந்த இந்த விபத்தில் சாமர்த்தியமாக அத்தனை பயணிகளையும் காப்பாற்றிய ரயில் ஓட்டுநரும், அவரது உதவியாளரும் மட்டும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் துரிதமாக மீட்டு, மேலும் படுகாயம் அடைந்த பல பயணிகளை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Tags : #RAILWAY #TRAINACCIDENT #AUSTRALIA
