'இவங்கள்ல யாரு?'... 'டி20 உலகக் கோப்பை விக்கெட் கீப்பர்'... 'கங்குலி சொன்ன அதிரடி பதில்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jan 25, 2020 11:47 PM

உலக்கோப்பை டி20-யில் யார் விக்கெட் கீப்பராக இறங்குவார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

Who is the WK in t20 Dhoni, KL Rahul, Rishabh Pant

தோனிக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட ரிஷப் பந்த், விக்கெட் கீப்பிங்கில் விமர்சனத்துக்கு ஆளாகி வந்ததார். எதிர்பாரதவிதமாக ஆஸ்திரேலியவுக்கு எதிரானப் போட்டியில் கே.எல்.ராகுல் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக விக்கெட் கீப்பிங் செய்தார். ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை ரசித்து செய்வதால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க முடிகிறது. இது அணிக்கு நல்ல பேலன்ஸை அளிப்பதால், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் ராகுலே விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பந்தயத்தில் யார் இடம்பெறுவார்கள் என்று பிசிசிஐ தலைவருமான கங்குலியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி, ‘தேர்வுக்குழு, கேப்டன் விராத் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதை முடிவு செய்வார்கள். அவர்கள் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடக்கும்’ என்று கூறினார். ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாண்டால் மட்டுமே இந்திய அணியில் தோனி இடம் பிடிப்பார் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்த நிலையில், கங்குலி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராகுல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி, 'அது விராத் கோலியின் முடிவு. அணி நிர்வாகமும் கேப்டனும் தான் ராகுலின் ரோலை முடிவு செய்ய வேண்டும். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ராகுல் சிறப்பாக ஆடியிருக்கிறார். அவரது டெஸ்ட் கெரியரை நன்றாகத்தான் தொடங்கினார். ஆனால் போகப்போக சரியாக ஆடாததால் இடத்தை இழந்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை பொறுத்தமட்டில் அவர் சிறப்பாக ஆடிவருகிறார். அவர் இதேபோல தொடர்ந்து சிறப்பாக ஆடுவார் என நம்புகிறேன். ஆனால் மறுபடியும் சொல்கிறேன்… அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது அணி நிர்வாகமும் கேப்டனும் எடுக்கும் முடிவு' என்று கங்குலி தெரிவித்துள்ளார்.