'காரில் வாக்குவாதம்' முற்றி... பெற்ற 'குழந்தைகளை' எரித்துக் கொன்ற 'விளையாட்டு வீரர்'... தானும் கத்தியால் குத்தி 'தற்கொலை'... தாய் கண் முன்னே நடந்த கோரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Feb 20, 2020 01:36 PM

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ரக்பி வீரர் தனது 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

australian rugby player sets fire to his 3 kids and kills himself

நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் (வயது 42). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரக்பி விளையாட்டுகளில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற ரோவான், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹன்னா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, ரோவான்-ஹன்னா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆண்டு ரோவான்-ஹன்னா தம்பதி பிரிந்தனர். அதன் பின், ரோவான் தனியாக வசிக்க தொடங்கிய நிலையில், அவரது 3 குழந்தைகளும் தாய் ஹன்னாவுடன் வாழ்ந்து வந்தன.

இந்நிலையில், ஹன்னா தனது 3 குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, காரை வழிமறித்த முன்னாள் கணவர் ரோவான், ஹன்னாவுடம் பேச வேண்டும் என கூறியுள்ளார். காரில் செல்லும் போதே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், காரில் இருந்து இறங்குமாறு ரோவானிடம் ஹன்னா தெரிவித்துள்ளார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த ரோவான் தான் எடுத்து வந்திருந்த பெட்ரோலை ஹன்னா மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றினர்.

என்ன நடக்கிறது என்று ஹன்னா சுதாரிப்பதற்குள் ரோவான் தீயை கொளுத்தினார். இதில் ஹன்னா உடலிலும், குழந்தைகள் உடலிலும் தீப்பற்றி எரிந்தது. அதன் பின்னர் ரோவான் கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டார்.

அந்த வழியாக நடந்து சென்ற வாலிபர் ஒருவர் இதை பார்த்து பதறிப்போய், காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் அவரால் ஹன்னாவை மட்டுமே காப்பற்ற முடிந்தது. ரோவானும், 3 குழந்தைகளும் காருக்குள்ளேயே உடல் கருகி பலியாகினர்.

ஆனால் அவரால் ஹன்னாவை மட்டுமே காப்பற்ற முடிந்தது. ரோவானும், 3 குழந்தைகளும் காருக்குள்ளேயே உடல் கருகி பலியாகினர். மயிரிழையில் உயிர்தப்பிய ஹன்னாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆஸ்திரேலியாவை உலுக்கி உள்ளது.

Tags : #AUSTRALIA #RUGBY #ROWAN