‘ரயில்’ நிலைய மேம்பாலம் ‘உடைந்து’ விழுந்து நேர்ந்த பயங்கரம்... விபத்தில் சிக்கி பலர் ‘படுகாயம்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் ரயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்திலுள்ள நடைமேடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை திடீரென உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அதில் ஒருவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : #MADHYA PRADESH #RAILWAY #BRIDGE #COLLAPSE
