இதய பிரச்சனையால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்டான நபர்.. அடம்பிடிச்சு கூடவே இருந்த செல்ல நாய்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Feb 02, 2023 10:20 PM

தனது உரிமையாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலும் அவரை பிரிய மறுத்த நாய் ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Dog stay with man after he gets diagnosed with heart disease

                          Images are subject to © copyright to their respective owners.

பொதுவாகவே பலருக்கும் செல்ல பிராணிகளை வளர்ப்பது பிடித்துப்போய்விடுகிறது. எப்போதும் நம்மையே சுற்றிவரும் நாய், பூனை உள்ளிட்ட வீட்டு விலங்குகள் காலப்போக்கில் நம் வீட்டின் ஒரு அங்கத்தினராகவும் மாறிவிடுபவை. இன்று நேற்று அல்ல. பண்டைய காலத்திலேயே மக்கள் நாய்களை பழக்கப்படுத்தி வேட்டையாட பயன்படுத்தியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த அளவுக்கு நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான பிணைப்பு மிக நீண்டது.

Images are subject to © copyright to their respective owners.

எப்போதும், உரிமையாளர்களின் அருகிலேயே இருக்க விருப்பப்படுபவை நாய்கள். தீராத பாசத்துடன் வலம் வரும் அவற்றை எளிதில் யாராலும் புறம்தள்ளிவிடவும் முடிவதில்லை. அந்த வகையில் ப்ரையன் பென்சன் என்பவர் தற்போது பகிர்ந்திருக்கும் வீடியோ சமுக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பென்சன் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். அதற்க்கு மேக்னஸ் என பெயர் சூட்டியுள்ள பென்சன் அதனை தனது ஒரு குழந்தை போலவே பராமரித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பென்சனுக்கு திடீரென இதய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, அவருடன் அவரது மகள்கள் தங்க, மேக்னஸ் நாயும் அவர்களுடன் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறது. ஆரம்பத்தில் அதனை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தாலும் தங்களால் அது முடியவில்லை என்கிறார்கள் பென்சனின் குடும்பத்தினர்.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து, மருத்துவமனையில் பென்சனின் அருகேயே அவரது செல்ல நாயும் இருந்திருக்கிறது. பயிற்சி பெற்ற நாய் என்பதால் மருத்துவமனை நிர்வாகமும் அதனை அனுமதித்துள்ளனர். இந்நிலையில், பென்சன் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், அவருக்கு அருகிலேயே எப்போதும் அவருடைய நாய் இருக்கிறது.

அந்த பதிவில் பென்சன்," மேக்னஸ் எல்லாவற்றையும் சிறப்பாக மாற்றிவிட்டது. யாரும் மருத்துவமனையில் இருக்க விரும்புவதில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இது எனக்கும் எனது மகள்களுக்கும் பல விதத்தில் அழுத்தத்தை கொடுத்தது. அவற்றில் இருந்து எங்களை மேக்னஸ் மீட்டெடுத்தது. மேக்னசை பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags : #DOG #HOSPITAL #VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dog stay with man after he gets diagnosed with heart disease | World News.