அமைச்சர் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு.. திறப்பு விழாவுக்கு வந்தபோது நடந்த விபரீதம்.. பதைபதைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jan 30, 2023 12:51 PM

ஒடிசா மாநிலத்தில் அரசு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அவர் மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Odisha Minister Shot In Chest By Cop Dies Hours Later At Hospital

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இவங்க நம்பர் அனுப்புங்க".. ஒரே வீடியோவில் ட்ரெண்டான பெண்.. உதவி செய்ய காத்திருக்கும் நடிகர் சோனு சூட்..!

ஒடிசா மாநிலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தவர் நபா கிஷோர். இவர் பிரஜ் ராஜ் நகர் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான புதிய அலுவலகங்களை திறந்து வைப்பதற்காக நேற்று காரில் சென்று இருக்கிறார். விழா நடைபெறும் இடத்திற்கு வந்த கிஷோர் காரில் இருந்து இறங்கிய நேரத்தில் திடீரென அங்கே துப்பாக்கி சத்தம் கேட்டிருக்கிறது. இந்த குழப்பத்திற்கு மத்தியில் அமைச்சர் திடீரென சரிந்து விழவே சூழ்நிலையை உணர்ந்த பொதுமக்கள் அவரை தாங்கிப் பிடித்திருக்கின்றனர்.

Odisha Minister Shot In Chest By Cop Dies Hours Later At Hospital

Images are subject to © copyright to their respective owners.

அவரது உடலில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை அபாயகரமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து உயிர்க் காக்கும் சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் மொத்த மாநிலமும் பரபரப்பில் உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இந்த நிகழ்வு மிகவும் அதிர்ச்சி தருவதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்நிலை அளவில் விரிவான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Odisha Minister Shot In Chest By Cop Dies Hours Later At Hospital

Images are subject to © copyright to their respective owners.

விழா நடைபெறும் இடத்தில் நின்று இருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அமைச்சரை துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறை அதிகாரிகள் இடத்தில் ஒப்படைத்து இருக்கின்றனர். விசாரணையில் அவர் காந்தி சவுக் புறக்காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி துணை காவல் ஆய்வாளர் கோபால் கிருஷ்ண தாஸ் என்பது தெரிய வந்திருக்கிறது.

61 வயதான கிஷோர் ஒடிசாவின் ஜர்சுகுடா தொகுதியில் 3 முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்த ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | கல்யாணம்னு ஒன்னு நடந்தா அவர்கூட தான்.. 10 வருஷ காத்திருப்பு.. இந்திய இளைஞரை கரம்பிடிக்க ஸ்வீடனில் இருந்து பறந்து வந்த இளம்பெண்..!

Tags : #ODISHA MINISTER #ODISHA MINISTER SHOT #ODISHA MINISTER SHOT IN CHEST #COP #HOSPITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Odisha Minister Shot In Chest By Cop Dies Hours Later At Hospital | India News.