டிவி பாத்துட்டு இருந்த சிறுமி.. திடீர்ன்னு செல்ல நாய் கொடுத்த அலெர்ட்.. "இதுக்கு பேர்தான் க்ரைம் பார்ட்னர்ஷிப்பா".. செம வீடியோ!!
முகப்பு > செய்திகள் > உலகம்அவ்வப்போது இணையத்தில் நாம் வலம் வரும் சமயத்தில், நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Also Read | "தினமும் இரவில் ஊசி போடணும், இல்லன்னா".. கால்பந்து ராஜா மெஸ்ஸியின் வலி நிறைந்த நிஜ கதை!?
அப்படி விதவிதமான வகையில் ஏராளமான வீடியோக்கள் நாள் தோறும் வைரலாகும் விஷயத்தையும் நம்மால் கவனிக்க முடியும்.
அதிலும் குறிப்பாக, வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளை குறித்தும், சிறு சிறு குழந்தைகள் செய்யும் சுட்டித்தனமான விஷயங்கள் குறித்தும் வைரலாகும் வீடியோக்கள், பார்ப்போர் பலரையும் ஒரு விதமாக மனம் நெகிழ வைக்கும். எதுவுமே தெரியாமல் சிறுவர்களோ சிறுமிகளோ வேடிக்கையாக ஏதாவது விஷயங்களை செய்வது, அதே போல நாயோ பூனையோ அல்லது வேறு ஏதேனும் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளோ மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவது என பல வீடியோக்கள் இணையவாசிகள் லைக்குகளையும் அள்ளும்.
அந்த வகையில் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி டிரெண்டிங்கிலும் இருந்து வருகிறது.
அப்படி வைரலாகி வரும் வீடியோவின் படி, வீடு ஒன்றின் வரவேற்பறையின் சோஃபாவில் அமர்ந்தபடி பள்ளி சிறுமி ஒருவர் சீருடை அணிந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த சிறுமியின் எதிரே இருக்கும் மேஜையில் பாட புத்தகங்கள் உள்ளிட்டவை உள்ளது. சிறுமி மிகவும் மும்முரமாக டிவி பார்த்துக் கொண்டிருக்க அவருக்கு அருகே, ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றும் தரையில் படுத்து கிடக்கிறது. அமைதியாக படுத்து கிடக்கும் அந்த நாய், திடீரென எழுந்து இரண்டு முறை குரைத்தபடி அதன் பின்னர் சிறுமி அருகே உள்ள மேஜையில் கால் வைத்து எச்சரிக்கை செய்வது போல தெரிகிறது.
அந்த சமயத்தில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் சிறுமி டக்கென பரபரப்பாக அங்கிருந்து எழுந்து டிவியை அணைத்துவிட்டு வேக வேகமாக பாடப் புத்தங்கள் திறந்திருக்கும் மேஜையில் உட்காருகிறார். அவர் ஏதோ எழுதி கொண்டிருப்பது போல செய்ய, அவரது வீட்டிற்குள் குழந்தையின் அப்பா கதவைத் திறந்து கொண்டு வருவதும் சரியாக இருக்கிறது. வீட்டுக்குள் நுழையும் அந்த அப்பா அறைக்கு செல்வது வரை அந்த சிறுமி எதையோ எழுதுவது போல அமர்ந்து கொண்டிருக்கிறார்.
டிவி பார்த்துக் கொண்டிருக்கும் சிறுமியை மிக அற்புதமாக கடைசி நொடியில் எச்சரித்து படிப்பது போல பாவனை செய்ய வைத்த நாய் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தை அதிகம் கலக்கி வருகிறது. பல லட்சக்கணக்கான இணையவாசிகள் இந்த வீடியோவை பார்த்துள்ள நிலையில், பலரும் அந்த நாய் குறித்து பலவிதமான கருத்துக்களையும் பாராட்டி வெளிப்படுத்தி வருகின்றனர்.
Pawtners in crime..🐕🐾👧📺😅 pic.twitter.com/1eYFWvDeFY
— 𝕐o̴g̴ (@Yoda4ever) December 18, 2022
Also Read | அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடிய கேரள வாலிபருக்கு நேர்ந்த துயரம்!!

மற்ற செய்திகள்
