"ட்ரைவர் அங்கிள் ஒரு நிமிஷம்".. தம்பிகளை காப்பாத்துறாங்களாம்😍.. சிறுமியின் கியூட்டான செயல்.. ஹார்டின்களை குவித்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்சாலையில் தனது சகோதரர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போது எதிரே வரும் ட்ரக்கை நிறுத்தும்படி சிறுமி ஒருவர் சைகை காட்டும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக குழந்தைகள் கியூட்டாக மேற்கொள்ளும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் சாலையில் ட்ரக் வரும்போது தனது சகோதர்களை பாதுகாப்பாக வீட்டுக்குள் அனுப்ப முயற்சிக்கும் சிறுமி ஒருவரின் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் இரண்டு சிறுவர்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சிறுமி ஒருவர் அங்கே வருகிறார். இதனிடையே, சற்று தொலைவில் வாகனம் ஒன்று வந்துகொண்டிருக்கிறது. இதனை கவனிக்கும் அந்த சிறுமி உடனடியாக தனது சகோதர்களை காப்பாற்ற சாலையின் நடுவே சென்று நிற்கிறார். மேலும், வாகனத்தை நிறுத்தும்படி சைகை செய்கிறார் அந்த சிறுமி.
இதனை கண்ட அந்த வாகன டிரைவரும் வண்டியை ஓரமாக நிறுத்துகிறார். அதன் பிறகு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வீட்டுக்குள்ளே செல்லும்படி சொல்கிறார் அந்த சிறுமி. தொடர்ந்து சிறுவர்கள் உள்ளே சென்ற பிறகு வாகனம் அப்பகுதியை கடந்து செல்கிறது. இந்த வீடியோவை Yoda4ever என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ட்விட்டரில் இந்த வீடியோ 30,000க்கும் மேற்பட்ட லைக்குகள் 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.
நெட்டிசன்கள் இந்த பதிவில்,"தனது சகோதர்களை இந்த சிறுமி சிறப்பாக கவனித்துக்கொள்கிறார்" என்றும்," இந்த அன்பான சிறுமி என்னை நெகிழ செய்துவிட்டாள். அந்த வாகன ஓட்டியும் நல்ல மனிதர் " எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
Little girl takes her big sister job seriously...👧👼❤️ pic.twitter.com/5fDG2XVJ1g
— 𝕐o̴g̴ (@Yoda4ever) December 14, 2022

மற்ற செய்திகள்
