500 மாணவிகளுக்கு மத்தியில் ஒரே ஒரு மாணவனா? .. பரீட்சை ஹாலில் மயக்கமே போட்டாப்ல.. பரபரப்பு சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலத்தில் சுமார் 500 மாணவிகளுக்கு மத்தியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவன் மயக்கம் அடைந்து விழுந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே தனக்கு மயக்கம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அவர் மாணவர் சொன்ன விஷயம் தான் பலரைது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | ஹனிமூன் போன புதுமண தம்பதி.. குதிரை சவாரி செய்யும்போது மணமகனுக்கு நேர்ந்த சோகம்...!
பொதுவாக தேர்வு என்றாலே மாணவர்களுக்கு அச்சம் ஏற்படுவதை பார்த்திருக்கிறோம். நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற நிலையில் தேர்வில் தங்களுக்கு தெரிந்த கேள்விகள் வருமா? என்பது குறித்தெல்லாம் யோசித்து மாணவர்கள் கவலைப்படுவது உண்டு. அதேபோல, தேர்வு மையங்களில் இந்த பயம் காரணமாக மாணவர்கள் மயங்கி விழுவது குறித்தும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பீஹார் மாநிலத்தில் வித்தியாசமான நிகழ்வு ஒன்று நடைபெற்றிருக்கிறது.
பீகார் மாநிலத்தில் 12 வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் ஷெரிப் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் மனிஷ் ஷங்கர் பிரசாத் எனும் மாணவர் பொதுத் தேர்வு எழுத சென்று இருக்கிறார். அன்று கணித தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவரும் தேர்வு எழுத துவங்கி இருக்கிறார். அப்போது திடீரென மனிஷ் மயக்கம் அடைந்து கீழே விழவே தேர்வு மைய அதிகாரி பதறி அடித்து அவரை எழுப்பி இருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
தொடர்ந்து அங்கிருந்த சக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஆம்புலன்ஸுக்கும் தகவலும் தெரிவிக்கப்படவே, பள்ளிக்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்திருக்கிறது. இதனையடுத்து மனிஷ் அருகில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சில மணிநேரங்களில் மனிஷின் உடல்நிலை சீரானதாக அவனது தந்தை சச்சிதானந்த பிரசாத் தெரிவித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் மனிஷை கவனித்துக்கொள்ளும் அவருடைய அத்தை இதுபற்றி பேசுகையில்,"தேர்வு மையத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் இருந்தனர். ஏராளமான பெண்கள் சூழ்ந்த பள்ளியின் தேர்வு அறையில் மனிஷுக்கு பள்ளி நிர்வாகம் இருக்கை கொடுத்துள்ளது. மாணவிகள் சூழ்ந்திருந்ததால் தான் பதட்டமடைந்ததாகவும் அதனால் மயக்கம் வந்துவிட்டதாகவும் மனிஷ் கூறியிருக்கிறான்" என தெரிவித்திருக்கிறார்.
Also Read | இறந்துட்டாருன்னு இறுதி சடங்கு செய்த குடும்பம்.. உயிருடன் கண்டுபிடிச்ச போலீஸ்.. பகீர் பின்னணி..!