விமானத்துல சச்சின் ஏறியதும் பயணிகள் போட்ட கோஷம்.. சச்சின் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Dec 18, 2022 06:23 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Sachin Tendulkar touching reaction to fans chant in flight

உலக கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கக்கூடிய பெயர் சச்சின் டெண்டுல்கர். அதிக ஒருநாள் போட்டிகள், அதிக சதங்கள் என சச்சின் வைத்திருக்கும் ரெக்கார்டுகளை முறியடிக்க இன்றும் பல முன்னணி வீரர்கள் திணறிவருகின்றனர். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். தனது 24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், டெண்டுல்கர் 53.78 சராசரியுடன் 15,291 டெஸ்ட் ரன்களையும், 44.83 சராசரியில் 18,426 ODI ரன்களையும் எடுத்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களையும் விளாசியுள்ளார். இப்படி பல சாதனைகளை படைத்த சச்சின் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

தற்போது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டுவரும் சச்சின் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் பகிர்ந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக பரவி வருகிறது.

பொதுவாக சச்சின் பேட்டிங்கில் இறங்கும்போது ரசிகர்கள் சச்சின்.. சச்சின்.. என முழக்கமிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் விமானத்தில் பயணித்திருக்கிறார் சச்சின். அப்போது, விமானத்தில் அவர் ஏறியதும் அங்கிருந்த சில பயணிகள் சச்சின்.. சச்சின்.. என கோஷமிட்டனர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின் அந்த ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,"நான் பேட் செய்ய வெளியே வந்ததை நினைவுபடுத்தும் வகையில், சற்று நேரத்திற்கு முன்பு எனது பெயரை உச்சரித்த விமான பயணிகளுக்கு நன்றி. துரதிர்ஷ்டவசமாக, சீட்பெல்ட் அணிந்திருந்ததால், உங்களை வரவேற்க என்னால் எழுந்து நிற்க முடியவில்லை. எனவே இப்போது அனைவருக்கும் வணக்கத்தை சொல்லிக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரையில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். தொடர்ந்து சச்சினின் ரசிகர்கள் இந்த பதிவில் கமெண்ட் போட்டும் வருகின்றனர்.

 

Tags : #SACHIN TENDULKAR #CRICKET #VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sachin Tendulkar touching reaction to fans chant in flight | Sports News.