உயிருக்கு போராடும் மீம்ஸ் நாயகன் சீம்ஸ்.. உரிமையாளரின் உருக்கமான பதிவு.. கலங்கிப்போன நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Dec 28, 2022 03:52 PM

சீம்ஸ் என்று நெட்டிசன்களால் அழைக்கப்படும் கபோசு நாயின் உடல்நிலை சரியில்லை என அதன் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார். இதனால் நெட்டிசன்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Cheems dog aka shiba inu which is fame in Social media in sick

Also Read | மாமல்லபுரத்தை குடும்பத்தினருடன் சுற்றிப்பார்த்த கூகுள் CEO சுந்தர் பிச்சை.. வைரல் போட்டோஸ்..!

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக மீம்கள் சமீப ஆண்டுகளில் பெரும்பான்மையான மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சிரமமான காரியத்தையும் எளிமையான வடிவில் மீம் மூலம் விளங்க வைத்துவிட முடியும் என்பதால் பலரும் இதனை விரும்புகின்றனர். அந்த வகையில் சமீப காலங்களில் பலரையும் ஈர்த்தது சீம்ஸ் எனும் நாய். இதன் புகைப்படத்துடன் கூடிய மீம்கள் வெடிசிரிப்பை வரவழைக்கக்கூடியவை. ஜப்பானை சேர்ந்த அஸ்துக்கோ சாடோ என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த பெண் நாயை வளர்க்க துவங்கியிருக்கிறார். அதற்கு கபோசு எனவும் அவர் பெயரிட்டிருக்கிறார்.

Cheems dog aka shiba inu which is fame in Social media in sick

2010 ஆம் ஆண்டு இதன் உரிமையாளர் கபோசுவை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தினார். அப்போது இதனுடைய மிக அழகான போஸ்கள் சமூக ஊடகங்களில் வைரலாக தொடங்கியது. அந்த சமயத்தில் இந்த நாயின் வயது வெறும் 5 தான். இந்த நிகழ்விற்கு பிறகே கபோசுவின் படத்தை எல்லா மீம்களிலும் நெட்டிசன்கள் பயன்படுத்த தொடங்கினர். அதுமுதல் இணையதளங்களை இந்த நாய் ஆக்கிரமித்தது. தமிழக சூழலிலும் சீம்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் இந்த நாயை கொண்டு பல மீம்களை நெட்டிசன்கள் உருவாக்கி வந்தனர்.

இந்நிலையில் கபோசுவிற்கு உடல்நிலை சரியில்லை என அதன் உரிமையாளர் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,"கிறிஸ்துமஸ் ஈவ் அன்று கபோசுவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அது நீர் அருந்தவோ சாப்பிடவோ இல்லை. மருத்துவமனைக்கு சென்றுவந்தோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.  

Cheems dog aka shiba inu which is fame in Social media in sick

இந்நிலையில், கபோசு உடல்நலம் சீராகவும் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பவும் பிரார்த்திப்பதாக நெட்டிசன்கள் பலரும் அந்த பதிவில் கமெண்ட் செய்துவந்தனர். இதனையடுத்து நேற்று சீம்ஸ் நாயின் உரிமையாளர் எழுதியுள்ள பதிவில்,"கபோசு மீண்டும் நீர் அருந்துகிறது. சாப்பிடுகிறது. இருப்பினும் அதன் உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. அது குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, சீம்ஸ் நாய் குணமடைய நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Also Read | Jo Mersa Marley: பாப் மார்லியின் பேரனும் புகழ்பெற்ற பாடகருமான ஜோ மெர்சா மார்லி மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags : #DOG #CHEEMS DOG #SHIBA INU DOG #SOCIAL MEDIA #CHEEMS DOG IN SICK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cheems dog aka shiba inu which is fame in Social media in sick | World News.