ஸ்கூல் போற வழில டான்ஸ்😍.. சிறுமியின் கியூட்டான ஸ்டெப்.. ஹார்ட்டின்களை அள்ளிக் குவித்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிறுமி ஒருவர் பள்ளி சீருடையில் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக மக்களை ஆச்சர்யப்படுத்தும் வகையிலான விஷயங்கள் மற்றும் சுட்டி குழந்தைகளின் கியூட்டான செயல்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற தவறுவதில்லை. அந்த வகையில் சாலையில் சீருடையில் சிறுமி ஒருவர் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை ஃபர்ஹான் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், பள்ளி செல்லும் சிறுமி ஒருவர் சீருடையில் வந்து கொண்டிருக்கிறார். திடீரென அவர் நடனமாட துவங்குகிறார். கியூட்டாக நடனமாடும் அந்த சிறுமி சற்று தூரம் சென்று மீண்டும் தனது நடனத்தை துவங்குகிறார். இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை.
ஃபர்ஹான் இந்த பதிவில்,"உங்களது நாளை மாற்றி அமைக்கக்கூடிய தருணம் எதிர்பாராத விதமாக கிடைத்திருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள்,"உண்மையில் இதுபோன்ற தருணங்கள் நம்முடைய நாளை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது" என ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார்.
இந்த பதிவில் மற்றொருவர்,"இதுபோன்ற சிறிய நிகழ்வுகள் எப்போதும் நம்மை புன்னகைக்க செய்வதுடன், நம்மடைய அன்றாடங்களை புத்துணர்ச்சியுடன் துவங்க உதவுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்னொருவர் இந்த பதிவில்,"சிறு வயது வாழ்க்கை தான் எத்தனை ஆனந்தமானது. அந்த நாட்களை நினைத்து ஏங்காத நபர்களே இருக்க முடியாது" என கமெண்ட் செய்திருக்கிறார். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
