DR.SHARMIKA : “தப்பு தான்.. மன்னிச்சிடுங்க.. அது ஹியூமன் எரர்.. நானும் மனுஷிதானே?”.. குலோப் ஜாமூன் சர்ச்சை குறித்து டாக்டர் ஷர்மிகா.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Jan 07, 2023 12:18 AM

இளம் சித்த மருத்துவர் டாக்டர்.ஷர்மிகா பல்வேறு இணையதளங்கல் வாயிலாக தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வந்த நிலையில், சமீபத்தில் அவர் பேசியது குறித்து சிலர் விமர்சித்திருந்தனர்.

dr sharmika on gulab jamun controversy டாக்டர் ஷர்மிகா

இந்நிலையில் குலோப் ஜாமூன் குறித்த தனது பதிலுக்கு விளக்கம் அளித்துள்ள அவர், “நாம் நிறைய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறோம். ஒரு சில கேள்விகளுக்கு தவறுதலாக பதில் அளிப்பதில்லையா? அப்படித்தான் குலோப் ஜாமூன் குறித்த கேள்விக்கு நான் அளித்த பதில். அது ஒரு ஹியூமன் எரர். நறுக்கென்று பேசுவதற்கு எப்படி முடியும் ? நானும் மனுஷிதானே?  அப்படி ஒரு ஃப்ளோவில் சொன்னது தான் குலோப் ஜாமுன் மூன்று கிலோ வெயிட் போடும் என்பது. ஸ்வீட் என்றாலே உங்களுக்கு வெயிட் போடும். ஏனென்றால் இயல்பாகவே அதில் கலோரி  அதிகமாக இருக்கிறது.‌

இப்ப எனக்கு 1008 வேலை இருக்கிறது என்று நாம் கூறினால் அது உண்மையில் 1008 வேலைகள் இருப்பதாக அர்த்தம் இல்லை அல்லவா? எனினும் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தினரான உங்களிடத்தில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த அளவுக்கு நீங்கள் என்னை மிகவும் நுண்ணிப்பாக கவனிக்கும் பொழுது நான் இன்னும் விழிப்புணர்வாகவும் சரியாகவும் பேச வேண்டும் என்பதை உணர்கிறேன்.

இதேபோல் ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும் என ட்ரை ஃப்ரூட் ஜூஸை பலருக்கும் நான் ஆலோசனை வழங்கி இருந்தேன். நீங்கள் ஏழையாக இருப்பதையோ பணக்காரராக இருப்பதையோ விடுத்து, பார்த்தால், சராசரி மனிதர்கள் பலரும் வாரத்தில் 3 நாட்கள் வெளியில் சாப்பிடுகின்றனர். சிலர் வார இறுதில் அசைவம் சாப்பிடுகிறார்கள். பலர் ஞாயிறு வெளியில் சென்று பார்ட்டி பண்ணுவேன் என்கிறார்கள். இவர்கள் மாதம் 2 ஆயிரம் உலர் பழங்களுக்கு செலவிடலாமே?

ஆனால் செலவு செய்ய முடியாதவர்கள் கூட உலர் பழ ஜூஸ்களை உண்பதால் அவர்களின் மருத்துவ செலவுகள் குறையும். இருப்பினும் மருத்துவ ரீதியாக உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளுங்களேன் என்று அவர்களுக்கு கூறினேன். பயிறு வகைகளை பற்றியும் அவர்களுக்காக கூறியிருக்கிறேன். ஒரு சில வீடியோக்களை மட்டுமே சிலர் பார்த்துவிட்டு மக்களை திசை திருப்பும் கருத்துக்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி இது உங்களை புண்படுத்த அல்ல.” என குறிப்பிட்டுள்ளார்.

Tags : #நுங்கு சர்ச்சை #நுங்கு CONTROVERSY #டாக்டர் ஷர்மிகா #டாக்டர் ஷர்மிளா #உடல்நலம் #ஆரோக்கியம் #உணவு #HEALTH TIPS #FOOD #HAIR FALL #FRUITS #MEDICINE #HOSPITAL #DR SHARMIKA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dr sharmika on gulab jamun controversy டாக்டர் ஷர்மிகா | Tamil Nadu News.