"இப்போ எப்படி பிரச்சனை வருதுன்னு பாக்குறேன்".. TTF வாசனின் புதிய சவால்.. ட்ரெண்டாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புத்தாண்டை முன்னிட்டு TTF வாசன் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன். தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த வாசன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் பரவி வைரலாகின. டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அண்மைக்காலமாக டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த வாசன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் பரவி வைரலாகின. டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அண்மைக்காலமாக டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
அண்மையில், சில வழக்குகளில் TTF வாசன் கைதான நிலையில், தனது வாழ்க்கை லட்சியங்களை நோக்கி தொடர்ந்து சென்று கொண்டிருப்பதாக பாசிட்டிவாக பேசியும் வருகிறார். இதனிடையே, TTF பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கி ஷாப் வைக்க இருப்பதாக வாசன் தெரிவித்திருந்தது ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை அளித்திருந்தது.
இந்நிலையில், TTF வாசன் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். காரின் சன் ரூஃப்-லிருந்து செல்பி வீடியோ எடுக்கும் வாசன் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். அப்போது,"பைக்-ல போனா தான் பிரச்சனை வருதுன்னு நான் கார்ல போயிட்டு இருக்கேங்க. இப்போ எப்படி பிரச்சனை வருதுன்னு பாக்குறேன். அனைவர்க்கும் ஹேப்பி நியூஇயர். நீங்க இந்த வருஷம் எல்லா சந்தோஷத்தையும் பெற்று பெருசா சாதிக்க மனசார பிரார்த்திக்கிறேன்" என்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
