சிறுவனுக்காக ஏக்கத்துடன் காத்திருந்த நாய்க்குட்டி.. வந்த உடனே ஆட்டத்தை பார்க்கணுமே..😍 ஹார்ட்டின்களை குவிக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்சிறுவனுக்காக காத்திருக்கும் நாய்க்குட்டி ஒன்று, சிறுவன் வந்தவுடன் அவனுடன் சந்தோஷமாக விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read | வீடுகட்ட குழி தோண்டுனப்போ கிடைச்ச புதையல்.. ஆத்தாடி இதெல்லாம் அவரோடதா?.. வெளிவந்த 1000 வருஷ மர்மம்..!
இணையத்தின் வளர்ச்சியால் சமூக வலை தளங்களின் வீச்சு தற்போது அதிகரித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். எளிதில் கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள் சமூக வலை தளங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் வைரலாகி விடுவது உண்டு. குறிப்பாக மக்களின் மனதை கவரும் சம்பவங்கள் இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற தவறுவதில்லை. அப்படியான வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக மனிதர்களுக்கு செல்லப் பிராணிகள் மீது எப்போதுமே ஒரு காதல் உண்டு. இப்போது என்று இல்லை. மனிதர்கள் நாடோடிகளாக இருந்த காலத்திலேயே விலங்குகளை பழக்கப்படுத்தி வளர்த்து வந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். விவசாயத்திற்கு மாடு வளர்ப்பில் துவங்கி நாய், பூனைகள் ஆகியவற்றை மனிதர்கள் வளர்த்து வந்ததற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. நவீன காலத்திலும் வளர்ப்பு பிராணிகள் மீது மக்களுக்கு இருக்கும் காதல் குறையவில்லை.
குறிப்பாக சிறுவர்களுக்கு நாய்க் குட்டிகளை வளர்ப்பது என்பது மிகவும் பிடித்துப்போய் விடுகிறது. ஆசையாய் வளர்க்கும் நாய்க் குட்டியோடு விளையாடுவது, அவற்றை வாக்கிங் கூட்டிச் செல்வது போன்றவை சிறுவர்களின் விருப்பமான செயலாகவே இருக்கிறது. தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் நாய்க் குட்டி ஒன்று சிறுவனுக்காக காத்திருக்கிறது.
அப்போது, சாலையில் பள்ளி வாகனம் ஒன்று வந்து நிற்கிறது. அதில் இருந்து சிறுவன் இறங்கி ஓடிவர வாலை ஆட்டயபடியே அமர்ந்திருந்த நாய்க்குட்டி ஆர்வத்துடன் எழுந்து நிற்கிறது. தோளில் பேக்கை மாட்டிக்கொண்டு சந்தோஷமாக ஓடிவரும் சிறுவனை சுற்றி சுற்றி வருகிறது நாய்க் குட்டி. பின்னர் அந்த சிறுவன் கீழே குனிந்து நாய்க் குட்டியின் தலை மற்றும் முகத்தில் வருடிக்கொடுக்கிறான். அதன் பின்னர் நாய்க்குட்டி தனது முன்னங்கால்களை சிறுவன் மீது வைத்து விளையாடுகிறது. Friend of animal எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த கியூட் வீடியோ தற்போது அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
