VIDEO : “அப்பா கேட்டா தம்பினு சொல்றேன்..” த்ரிஷாவுக்கு சிம்பு ப்ரொபோஸ் பண்ணும் VTV சீன்.. OFFICE-ல் ரிகிரியேட் செய்த ஊழியர்கள் .. 😅

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Feb 02, 2023 07:06 PM

சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

VTV Simbu Propose Trisha Office staffs recreates video

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | Cool Suresh : “தமிழ்நாட்டுக்கு 3 தளபதி.. 2 சூப்பர் ஸ்டார்.. கமெண்ட்ல திட்டுறவங்க கூகுள்ல போய் பாருங்க”! - கூல் சுரேஷ்.  

2010 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரொமான்டிக் திரைப்படமாக இளசுகள் மத்தியில் ஹிட் அடித்தது. மலையாளி தமிழ் பெண்ணை காதல் செய்யும் தமிழ் மெக்கானிக்கல் இன்ஜினியர் கம் டைரக்டரின் கதை தான் இது.

தன்னைவிட 1 வயது அதிகமாக இருக்கும் மலையாள பெண்ணை காதலிக்கும் நாயகன் அந்த காதலுக்காக கேரளா வரை சென்று பல இன்னல்களைப் படுகிறார். இறுதியில் அப்பெண்ணின் தந்தை இந்த காதலுக்கு தடையாக இருக்கிறார். இவர்களின் காதல் சேர்கிறதா? அதே சமயத்தில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் நாயகன் இயக்குனர் ஆகிறாரா? என்பதாக இந்த கதை இருக்கும்.

ஆனால் இறுதியில் காதல் இவர்களின் கைகூடவில்லை. ஆனால் இயக்குனராக மாறும் நாயகனின் முதல் திரைப்படத்தில் காதல் கைகூடியதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதை நாயகி பிரிமியர்  ஷோவில் பார்த்துவிட்டு நாயகனை பாராட்டுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சிம்பு & த்ரிஷா நடிப்பிலான இந்த திரைப்படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகவும் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில்தான் அலுவலக ஊழியர்கள் சிலர் தங்களுடைய ரிலாக்ஸ் நேரத்தில் செய்த இன்ஸ்டா ரீல்ஸ் வைரல் ஆகி வருகிறது. இதில் சிம்பு த்ரிஷாவிடம் ப்ரபோஸ் செய்யக்கூடிய காட்சியில், த்ஷா மீண்டும் சிம்பு குறித்து விசாரணை செய்யக்கூடிய வசனங்கள் நிரம்பிய அனைத்தையும் துண்டு பேப்பரில் எழுதிக் கொண்டு எதார்த்தமாக இந்த ஊழியர்கள் பேசுகின்றனர். இடையிடையே அவர்களே வெட்கப்பட்டு சிரிக்கின்றனர். எல்லோரிடமும் நடிப்புத் திறமையும் கலை ஆர்வமும் இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோ உதாரணமாக இருப்பதாக பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sankar (@sankarsalem)

Also Read | Cool Suresh : அந்த படம் மட்டும் வொர்க் அவுட் ஆகலனா சினிமாவ விட்டே போயிடுவேன்..! - கூல் சுரேஷ் உருக்கம்.

Tags : #SIMBU #TRISHA #VTV #VINNAI THAANDI VARUVAAYA #INSTA REELS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. VTV Simbu Propose Trisha Office staffs recreates video | Tamil Nadu News.