"எப்ப வழியனுப்ப வந்தாலும் அப்பா இப்படித்தான்".. மகன் பகிர்ந்த எமோஷனல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jan 28, 2023 12:46 AM

தனது மகனை ரயில்வே நிலையத்தில் வழியனுப்பும் தந்தை ஒருவருடைய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Video Of Father Dropping His Son At Railway Station goes viral

பொதுவாகவே தந்தையின் பாசம் ஒரு எழுதப்படாத கவிதை போலவே இருப்பது உண்டு. அவர்களின் அன்பு பெரும்பாலும் செயல்கள் மூலம் பரிமாணம் கொள்பவை. அப்படி தனது மகனை ரயில்வே நிலையத்தில் இறக்கிவிட்டு பிரிய மனமில்லாமல் நிற்கும் தந்தை ஒருவருடைய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளங்கள் எப்போதும் பல எமோஷனலான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அந்த வகையில் மகனை பிரிய மனமில்லாமல் ரயில்வே நிலையத்தில் தவிப்புடன் நிற்கும் தந்தை ஒருவரின் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி பவன் ஷர்மா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் ரயில் நகர அதனுடன் ஷர்மாவின் தந்தையும் நடந்து செல்கிறார். அப்போது, ரயில் வேகமெடுக்க, பரிதவிப்புடன் அவர் கையசைக்கிறார். ஷர்மா அந்த பதிவில்,"ஒவ்வொரு முறையும் என் அப்பா என்னை வழியனுப்ப வரும்போது... நான் மறையும் வரை அவர் என்னை பார்த்தபடியே நடந்து வருவார். இது ஒவ்வொரு முறையும் உணர்ச்சிவசப்பட செய்துவிடுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ இதுவரையில் 9.8 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த பதிவில் நெட்டிசன்கள்,"அப்பா தனது அன்பை வெளிப்படுத்தும் ஒரே வழி இதுதான்" எனவும் "அவருடைய கண்களிலேயே அந்த அன்பு தெரிகிறது" எனவும் "மிக அருமையான வீடியோ" என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.

 

Tags : #FATHER #SON #TRAIN #VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Video Of Father Dropping His Son At Railway Station goes viral | India News.