'வயிறார சாப்பிட்ட கஸ்டமர்!'... உணவு பரிமாறியவருக்கு கொடுத்த டிப்ஸை வெச்சு ஒரு ரெஸ்டோரண்டே திறந்திடலாம்! எவ்ளோ தெரியுமா? நெகிழவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பென்சில்வேனியாவில் நடந்துள்ள மனிதநேயம் மிக்க சம்பவம் ஒன்று இணைய வாசிகளை நெகிழ வைத்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை அடுத்து, ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு சாப்பிட வந்த நபர் ஒருவர் 5000 டாலர்கள் டிப்ஸ் கொடுத்துள்ளார். இதனை இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமானால், சுமார் 3.67 லட்சம் ரூபாய். இவ்வளவு ரூபாய் டிப்ஸ் கொடுத்து ஆச்சரியப் படுத்தியுள்ள அந்த சம்பவம் அந்தோணிஸ் எனும் ரெஸ்டாரண்டில் நிகழ்ந்துள்ளது. பென்சில்வேனியாவின் பாக்ஸ்டன் எனும் டவுனில் அமைந்திருக்கிறது அந்தோணிஸ் எனும் உணவகம். இங்கு பணிபுரிந்து வரும் கியானா டி ஏஞ்சலோ எனும் பணிப்பெண்ணுக்கு தான் இந்த மாபெரும் மனிதாபிமானம் மிகுந்த டிப்ஸ் கிடைத்துள்ளது.
எப்போதும் போல தான் பணிபுரியும் உணவகத்தின் ஒரு டேபிளில் உணவருந்த வந்த நபருக்கு உணவு பரிமாறிய கியானா இயல்பாகவே எல்லாரையும் கவனிப்பது போலவே அந்த நபரையும் கவனித்து தனது வேலையை செய்து வந்துள்ளார். எனினும் பொதுவாக சாப்பிட வருபவர், சாப்பிட்டு முடித்த பிறகு, உணவு பரிமாறிய ஊழியருக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அந்த டிப்ஸ் எவ்வளவு ரூபாய் தான் இருந்துவிடப் போகுது? ஆனால் கியானாவுக்கு எதிர்பாராத விதமாக $5000 (5 ஆயிரம் டாலர்) டிப்ஸ் கொடுத்து ஆச்சரியம் அளித்துள்ளார் அந்த வாடிக்கையாளர்.
அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த செயலை செய்த வாடிக்கையாளரை கவுரவிக்கும் விதமாக, உணவக உரிமையாளர் இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பிட்ட அந்த உணவகத்தில் ஊழியராக கியானா பணிபுரிந்து கொண்டே, நர்ஸிங் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.