வெறும் 200 ரூபாய்க்கு லீஸ்க்கு எடுத்த நிலத்தில் 'குரு'!.. இந்தியாவில் விவசாயிக்கு அடித்த ‘குபேர யோகம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் 200 ரூபாயில் லீஸுக்கு எடுத்த நிலத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரம் விவசாயி ஒருவருக்கு கிடைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் பண்ணா பகுதியில் விவசாயி லகோன் யாதவ் இல்லாத பத்துக்கு பத்து நிலத்தை லீஸுக்கு எடுத்துள்ளார். அதில் குழி தோண்டியபோது கிடைத்த ஒரு கூழாங்கல் வித்தியாசமாக தெரியவே அரசு அதிகாரியிடம் எடுத்துச் சென்று காண்பித்துள்ளார்.
அப்போது அது 14.98 கேரட் வைரம் என்று தெரியவந்தது. இதனை அடுத்து அதை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். அந்த வைரம் சனிக்கிழமை அன்று 60 லட்ச ரூபாய்க்கு மேல் ஏலம் போனது. உடனே அந்த பணத்தில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் மோட்டார் சைக்கிள் வாங்கிய அவர், அந்த பணத்தை தனது நான்கு குழந்தைகளின் கல்விச் செலவுக்காக ஃபிக்ஸட் டெபாசிட் செய்துள்ளார்.
இதே போல் மத்திய பிரதேசத்தில் 10 நாட்களில் இதுவரை நான்கு பேருக்கு இபப்டி வைரக்கற்கள் கிடைத்துள்ள. அவை அனைத்தும் ஒன்றரை கோடி ரூபாய் வரை ஏலம் போயின.

மற்ற செய்திகள்
