மறக்க முடியாத ‘முதல் சந்திப்பு’.. கிரிக்கெட் கிரவுண்ட்ல காதலை சொல்ல என்ன ‘காரணம்’?.. இந்திய ரசிகர் சொன்ன க்யூட் ‘லவ் ஸ்டோரி’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Dec 04, 2020 05:04 PM

இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியின் போது காதலை வெளிப்படுத்தி வைரலான காதல்ஜோடியின் முதல் சந்திப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Story of viral love couple during IND vs AUS ODI match

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த 2-வது ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலிய பெண்ணிடம் இந்திய ரசிகர் ஒருவர் காதலை வெளிப்படுத்தினார். அதற்கு அப்பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த இந்திய இளைஞரின் பெயர் தீபன் மாண்டலியா, அவரது காதலி பெயர் ரோஸிலி விம்புஷ் என்ற ரோஸ்.

Story of viral love couple during IND vs AUS ODI match

தங்களது முதல் சந்திப்பு குறித்து தெரிவித்த தீபன் மாண்டலியா, ‘2 ஆண்டுகளுக்கு முன்பு நான் மெல்போர்னில் இந்த சிறிய குடியிருப்பில் குடியேறினேன். இந்த வீடு என் வாழ்க்கையை மாற்ற போகிறது என எனக்கு அப்போது தெரியாது. நீங்கள் வீடு மாறும்போது, முந்தைய குடியிருப்பாளர்களின் தபால் உங்களில் பலருக்கு கிடைத்திருக்கும் என நான் நம்புகிறேன். அதேபோல எனக்கும் ஒரு தபால் வந்தது. அந்த தபாலில் ரோஸிலி விம்புஷ் என பெயர் இருந்தது. இப்படிதான் எங்கள் சந்திப்பு நடந்தது.

Story of viral love couple during IND vs AUS ODI match

எங்களுடைய முதல் சந்திப்பு மறக்க முடியாதது. தபாலை கொடுக்க சென்றபோது உண்மையில், நான் அவரை பார்த்ததும் பதற்றமாகவும், பேசவும் பயந்தேன். வெறும் 10 நொடிகளில் அந்த சந்திப்பு முடிந்துவிட்டது. தபாலை கொடுத்ததும் இரண்டு பேரும் ‘குட் பை’ சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம். ஆனால் அதன்பிறகு தான் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம்.

Story of viral love couple during IND vs AUS ODI match

கிரிக்கெட் எப்போதுமே எங்களுக்குள் ஒரு சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. இருவரும் அவரவர் அணிக்காக விசுவாசத்தை காட்டி விவாதித்தாலும், அது எங்களை ஒன்றிணைத்தது. கிரிக்கெட் எங்கள் உறவின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருந்ததால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியின்போது காதலை சொல்ல முடிவெடுத்தேன்.

Story of viral love couple during IND vs AUS ODI match

தற்போது அவளை என் அருகிலேயே வைத்திருக்கும் ஓர் அதிர்ஷ்டசாலி நான். இனிமேல்தான் நாங்கள் நீண்ட இன்னிங்ஸ் செல்ல வேண்டி உள்ளது. நாங்கள் இருவரும் இணையத்தில் வைரலாகி உள்ளோம் என்பது தெரியும். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நான் உண்மையிலேயே நன்றி சொல்ல விரும்புகிறேன்’ என இந்திய ரசிகர் தீபன் மாண்டலியா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Story of viral love couple during IND vs AUS ODI match | World News.