“தம்பி.. நான் புயல் மழைப்பா? ஒரு மட்டு மரியாதை வேணாம்? இப்படி பண்றியே!”.. - ‘தெறிக்கவிடும்’ #VIRALVIDEO
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்சிலர் புயல் காற்றில் பொறி உருண்டை சாப்பிடுவார்கள் என்றும், சிலர் சுனாமியிலேயே ஸ்விம்மிங் பண்ணுவார்கள் என்றும் பொதுவாக சொல்லப்படுவது உண்டு.

இந்த புதுமொழிகளுக்கு ஏற்ப ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் முதலில் நிவர் புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் தயார் நிலையில் இருந்த மக்கள் மிகுந்த மழையை எதிர்கொண்டனர். எனினும் கடலோர மாவட்டங்களை குறிவைத்த நிவர் புயலால் பெருமளவில் சேதமில்லாமல் தப்பிக்க முடிந்தது. இந்நிலையில் புரெவி புயலை டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் எதிர்கொண்டு வருகின்றனர். சென்னை உட்பட தமிழகத்தில் இந்த புயல் பலத்த கனமழையை தந்துகொண்டு இருக்கிறது.
இந்த நிலையில்தான், அடிக்கும் அசுர மழையில் டக்குசிக்கு டக்குசிக்கு என இஷ்டத்துக்கு ஆட்டமாடி ஜிம்னாஸ்டிக்கெல்லாம் பண்ணும் நபர் ஒருவரின் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. எங்கு எந்த சூழலில் எடுக்கப்பட்டது என்கிற விபரங்கள் சரிவர தெரியாத நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்த நபர் ஒருவர், ‘இலங்கைக் காரர்கள் இப்படித்தான் மழையை எதிர்கொண்டிருக்கக் கூடும்’ என கேப்ஷனிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Srilankans at the moment 🤣 #CycloneBurevi pic.twitter.com/Wbu3EUEm2D
— Shakoor (@loku_mahathaya) December 2, 2020
பார்க்கும் பலரும், இந்த வீடியோ செம்ம காமெடியாக இருப்பதாக கமெண்டுகளை பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
