தொழிலதிபர் தொலைத்துவிட்ட, ‘ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஓவியம்!’.. ஆபரேஷனில் இறங்கிய மருமகன்.. கடைசியில் இருந்த இடம் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்தொழிலதிபர் தொலைத்துவிட்ட, ‘ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஓவியம்!’.. ஆபரேஷனில் இறங்கிய மருமகன்.. கடைசியில் இருந்த இடம் தெரியுமா?

ஜெர்மனியில் Duesseldof விமான நிலையத்தில் தொழிலதிபர் ஒருவர் மறந்துபோய் விட்டுச்சென்ற கால் மில்லியன் யூரோ மதிப்புள்ள ஓவியம் ஒன்று காயலாங்கடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் Duesseldofலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானத்தில் ஏறிய புகழ்பெற்ற பிரஞ்சு ஓவியக்கலைஞர் Yves Tanguy வரைந்த சர்ரியலிஸ்ட் ஓவியம் ஒன்றைத்தான் அந்த தொழிலதிபர் செக்-இன் பண்ணும்போது விமான நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளார்.
இஸ்ரேல் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் Duesseldof போலீஸைத் தொடர்பு கொண்டு மூடப்பட்டிருந்த 2 லட்சத்து 80 ஆயிரம் யூரோ மதிப்பிலான ஒரு கலைப்படைப்பு காணாமல் போய்விட்டதாக குறிப்பிட்டு புகார் அளித்தார்.
ஆனாலும் அந்த தொழிலதிபரின் மருமகன், பெல்ஜியம் விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து இன்ஸ்பெக்டர் ஒருவர் மூலம் துப்புரவு நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் காகித மறுசுழற்சி காயலாங்கடையில் இருந்து அந்த ஓவியத்தை கண்டுபிடித்து மீட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
