"உன் கனவு நனவாயிடுச்சு.. அத பாக்க தான் நீ இல்ல".. வெள்ளித்திரையில் நாயகியாக கால் பதித்த சித்ரா!.. 'கனத்த இதயத்துடன்' சக நடிகை பகிர்ந்த 'FIRST LOOK' போஸ்டர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் மறைவு தென்னிந்திய திரை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவருடைய ரசிகர்களும் அவருடன் பணியாற்றிய திரை பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவு குறித்தும் நினைவுகள் குறித்தும் பகிர்ந்து வருகின்றனர். சின்னத்திரையில் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து புகழ்பெற்ற விஜே சித்ரா பலரிடமும் சீரியல் நாயகியாகவே பிரபலமாகி இருக்கிறார். ஆனால் அவர் சின்னத்திரையில் மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் கால் பதிக்கும் முயற்சியில் இருந்திருப்பது தற்போது வெளிச்சமாகியுள்ளது.
ஆம் சித்ரா நாயகியாக நடித்து வந்த ‘கால்ஸ்(Calls)’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த போஸ்டரை சித்ராவுடன் நடித்த சக நடிகையான ஹேமா சதீஷ் என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்தப் பெண்ணுக்கு நிறைய கனவுகள் இருந்தன. சித்துவின் நடிப்பில் கால்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை உங்களுக்காக வெளியிடுகிறேன். இந்த படம் தொடர்பான அழகான பயணத்தில் நானும் அவருடன் இருக்கிறேன். இந்த நேரத்தில் நீ இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் உன்னுடைய எனர்ஜி அதை நாங்கள் உணர்ந்து கொண்டே இருப்போம். உன்னுடைய இருப்பு எங்களிடம் எப்போதும் இருக்கும்.
இப்போது நீ இந்த உலகத்தில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீ எப்போதும் எங்களுடைய இதயத்திலும் எங்களுடைய நினைவுகளின் மத்தியிலும் இருப்பாய். இப்போது உன்னுடைய கனவு நினைவாகியிருக்கிறது. ஆனால் இதை பார்ப்பதற்கு தான் நீ இல்லை” என்று சொல்லி விஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்வதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
சித்ராவின் மரணம் தொடர்பான காரணங்களை கண்டுபிடிக்கும் விதமாக ஆர்டிஓ அதிகாரிகள் சித்ராவின் குடும்பத்தினர் மற்றும் சித்ராவின் கணவர், உடன் பழகியவர்கள் ,உடன் பணிபுரிந்தவர்கள் என பலரையும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்
