'இவர் தான் உண்மையான இன்ஸ்பிரேஷன்!'.. தற்கொலைக்கு முன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை சித்ரா பகிர்ந்த கடைசி பேஸ்புக் போஸ்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகை உலுக்கியுள்ளது.

தொடர்ச்சியாக திரையுலகைச் சேர்ந்த இளம் நடிகர்கள் இந்த வருடம் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்த சம்பவங்கள் அதிர்வலைகளை உண்டுபண்ணின. இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்திரை பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில், முல்லை எனும் கதாபாத்திரமாக நடித்துப் புகழ்பெற்றவர் சித்ரா.
இந்நிலையில் நடிகை சித்ரா, இன்று அதிகாலை சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காலை முதலே தமிழகத்தை மட்டுமல்லாத தென்னிந்திய சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை உலுக்கி வருகிறது. முதல் நாள் இரவு வரையிலும் இன்ஸ்டாகிராமில் சித்ரா ஆக்டிவாக இருந்ததாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் அவரது கடைசி பேஸ்புக் போஸ்ட் பற்றிய தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், சித்ராவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் விளையாடிவரும் கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்ஸ்பிரேஷன் என ஒரு மீம்ஸ் பதிவை “Congrats Nattu” எனும் கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.
தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
